கோப்புப் படம் 
தமிழ்நாடு

அரையாண்டு செய்முறைத் தேர்வு: டிச., 6க்குள் முடிக்க உத்தரவு!

10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு செய்முறை தேர்வுகளை டிச., 2 முதல் 6ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க உத்தரவு.

DIN

10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு செய்முறை தேர்வுகளை டிசம்பர் 2 ஆம் தேதி முதல் 6ம் தேதிக்குள் நடத்தி முடிக்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

அரையாண்டு செய்முறைத் தேர்வுகளை டிச. 2ஆம் தேதி தொடங்கி டிச. 6ஆம் தேதி முடிக்கத் திட்டமிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரசு, அரசு உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு இந்த உத்தரவை பள்ளிக் கல்வித் துறை பிறப்பித்துள்ளது.

முன்னதாக பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டது.

இதில், 10ஆம் வகுப்புக்கு டிச. 10ஆம் தேதி முதல் டிச. 23ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதேபோன்று 12ஆம் வகுப்புக்கு டிச. 9ஆம் தேதி முதல் டிச. 23ஆம் தேதி வரை தேர்வு நடைபெறவுள்ளது.

டிச. 23ஆம் தேதிக்கு பிறகு அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வுகள் காலை 9:45 மணிக்கு தொடங்கி மதியம் 1:00 மணிக்கு முடிவடைகின்றன.

காலை 9:45 முதல் 9:55 வரை கேள்வி தாளை படிப்பது.

காலை 9:55 முதல் 10:00 வரை தேர்வரின் விவரங்களை சரிபார்ப்பது.

காலை 10:00 முதல் மதியம் 1:00 வரை தேர்வு நடைபெறும் என பள்ளிக் கல்வித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7-ல் அமைதிப் பேரணி!

சொல்லப் போனால்... பஹல்காமிலிருந்து லெவல் கிராசிங் வரை...

தமிழகத்துக்கு மின்-பேருந்துகள்: டாடா மோட்டாா்ஸ் ஒப்பந்தம்

அரையாண்டில் 5% சரிந்த வீடுகள் விற்பனை

மனகஷ்டம் நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT