கோப்புப்படம் 
தமிழ்நாடு

சென்னை, செங்கல்பட்டு பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை!

தமிழகத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் விவரம்..

DIN

சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று(நவ.29) ஒருநாள் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் (புயல் சின்னம்) வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாமல்லபுரத்துக்கும், காரைக்காலுக்கும் இடையே சனிக்கிழமை (நவ. 30) கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையொட்டி, சென்னை தொடங்கி ராமநாதபுரம் வரை கடலோர மாவட்டங்களில் கனமழைக்கான சிவப்பு மற்றும் ஆரஞ்ச் எச்சரிக்கை இன்று விடுக்கப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கையை தொடர்ந்து, கடலூர், விழுப்புரம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து வியாழக்கிழமையே உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இரவு முழுவதும் மழை பெய்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என்று மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பலத்த மழையால் போடிமெட்டில் பனிமூட்டம்

வேட்டக்குடி பறவைகள் சரணாலயத்தில் பனை விதை நடும் விழா

மானாமதுரை பகுதியில் இன்று மின் தடை

கரூர் பயணம்: தவெக நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை

தவெக மாவட்டச் செயலருக்கு பிணை வழங்கி உத்தரவு

SCROLL FOR NEXT