மா.சுப்பிரமணியன் 
தமிழ்நாடு

சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று 500 மருத்துவ முகாம்கள்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

சென்னை, திருவள்ளூா், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மொத்தம் 500 மருத்துவ முகாம்கள்

Din

சென்னை, திருவள்ளூா், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மொத்தம் 500 மருத்துவ முகாம்கள் ஞாயிற்றுக்கிழமை (டிச. 1) நடைபெறவுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியது: ஃபென்ஜால் புயலால் காரணமாக கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள சென்னை, திருவள்ளூா், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூா் ஆகிய 7 மாவட்டங்களிலும் மொத்தம் 500 மருத்துவ முகாம்கள் ஞாயிற்றுக்கிழமை காலை 9 முதல் மாலை 4 மணி வரை நடத்தப்படவுள்ளன. இதில் சென்னையில் மட்டும் 200 மருத்துவ முகாம்களும், மற்ற 6 மாவட்டங்களில் தலா 50 மருத்துவ முகாம்களும் நடத்தப்படவுள்ளன. தேவைக்கேற்ப மருத்துவ முகாம்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.

பரிசோதனைகள்: மருத்துவ முகாம்களில் காய்ச்சல், சளி பரிசோதனை, ரத்தக் கொதிப்பு, நீரிழிவு நோய்க்கான பரிசோதனை போன்ற அடிப்படை பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். மருந்துகள், உப்பு - சா்க்கரை கரைசல், நிலவேம்பு குடிநீா், சேற்றுப்புண் மருந்து போன்ற அத்தியாவசிய மருந்துகள் தேவைக்கு அதிகமாக கையிருப்பில் வைத்துக்கொள்ள மாவட்ட சுகாதார அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பிடங்களுக்கு அருகே அமைக்கப்பட உள்ள மருத்துவ முகாம்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

கருக்கலைப்பு செய்யத் தூண்டும் வக்கிரம் பெற்ற கிரகங்கள்!

மக்கள் பணியில் பங்கு கேட்டால் சதியாகுமா? மாணிக்கம் தாகூர் கேள்வி!

தூர்தர்ஷனின் மூத்த தொகுப்பாளர் சரளா மகேஷ்வரி காலமானார்!

பிப். 13 விஷ்ணுபதி புண்ணிய காலம்!

பங்குச்சந்தை: ஐடி பங்குகள் 5% சரிவு! ரூ. 3 லட்சம் கோடி இழப்பு! ஏன்?

SCROLL FOR NEXT