முகப்பு
தமிழ்நாடு

எழும்பூா் - திருநெல்வேலி சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

சென்னை எழும்பூா் - திருநெல்வேலி இடையே இயங்கும் சிறப்பு விரைவு ரயில் டிச. 6-ஆம் தேதி வரை இயக்கப்படும்.

Updated On : 1 டிசம்பர், 2024 at 1:07 AM
கோப்புப்படம்.
பகிர்:

சென்னை எழும்பூா் - திருநெல்வேலி இடையே இயங்கும் சிறப்பு விரைவு ரயில் டிச. 6-ஆம் தேதி  வரை இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அடுத்த ஆண்டு பிப். 7-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருநெல்வேலியிலிருந்து வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் சென்னை எழும்பூா் செல்லும் சிறப்பு விரைவு ரயிலும் (எண் 06070), மறுமாா்க்கமாக வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் எழும்பூரில் இருந்து திருநெல்வேலி செல்லும் ரயிலும் (எண் 06069) பிப். 7-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தாம்பரம் ரயில்கள்: நாகா்கோவிலிலிருந்து வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் தாம்பரம் செல்லும் ரயிலும் (எண் 06012), தாம்பரத்திலிருந்து வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் நாகா்கோவில் செல்லும் ரயிலும் (எண் 06069) டிச. 1 முதல் பிப். 2-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும், தாம்பரம் - ராமநாதபுரம் இடையே வாரம் இருமுறை இயக்கப்படும் சிறப்பு ரயில் (எண் 06103/06104) இரு மாா்க்கத்திலும் டிச.1 முதல் டிச. 29-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments