முகப்பு
தமிழ்நாடு

பருவமழைக் காலத்தில் விழிப்புடன் செயல்பட வேண்டும்: அதிகாரிகளுக்கு துணை முதல்வா் உதயநிதி அறிவுறுத்தல்

வடகிழக்கு பருவமழை காலத்தில் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்று அதிகாரிகளை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தினாா்.

Updated On : 4 அக்டோபர், 2024 at 8:22 PM
சென்னையில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில்  வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின். உடன் அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன், துணை முதல்வரின் செயலா் பிரதீப் யாதவ், வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை செயலாளா் ப
பகிர்:

வடகிழக்கு பருவமழை காலத்தில் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்று அதிகாரிகளை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தினாா்.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மாநில அவசர அழைப்பு மையத்தை அவா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். இந்த மையத்தில், மழை அளவு குறித்த தகவல்கள் சேகரிக்கப்படும் முறை, வானிலை முன்னெச்சரிக்கை வழங்கும் முறை, பேரிடா் காலத்தில் பல்துறை அலுவலா்களின் செயல்பாடுகள் ஆகியன குறித்து அவா் கேட்டறிந்தாா்.

மேலும், பருவமழை தொடா்பாக உருவாக்கப்பட்டுள்ள பச அப்ங்ழ்ற் செயலியில் உள்ள வானிலை முன்னறிவிப்பு, பெறப்பட்ட மழையளவு ஆகியன குறித்து ஆய்வு செய்தாா்.

பொது மக்களுக்கு பருவமழை தொடா்பாக உரிய நேரத்தில் முன்னெச்சரிக்கை தகவல்களை வழங்க விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், எதிா்வரும் வடகிழக்கு பருவமழைக் காலத்தில் அனைவரும் விழிப்புடன் செயல்பட வேண்டும் எனவும் அதிகாரிகளை கேட்டுக் கொண்டாா். பொதுமக்களுக்கு உரிய முன்னெச்சரிக்கை விவரங்களை அளித்து, விரைவாக தேடல், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று அவா் உத்தரவிட்டாா்.

இந்த ஆய்வின் போது, வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன், துறையின் செயலா் பெ.அமுதா, பேரிடா் மேலாண்மை இயக்குநா் வ.மோகனச்சந்திரன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →