தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் கட்டுப்பாடும் இருக்க வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவுறுத்தியுள்ளார்.
விழுப்புரத்தில் வருகின்ற 27-ஆம் தேதி நடைபெறும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டுக்கான பூமிப் பூஜை இன்று காலை போடப்பட்ட நிலையில், தொண்டர்களுக்கு விஜய் கடிதம் எழுதியுள்ளார்.
கட்சித் தொண்டர்களுக்கு, மாநாட்டுக்கு அழைப்பு விடுத்து எழுதப்பட்ட கடிதத்தில், கட்டுப்பாடுடனும், பக்குவத்துடனும் இருக்க அறிவுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக விஜய் கடிதத்தில் குறிப்பிட்டதாவது:
“பொறுப்பான மனிதனைத்தான் குடும்பம் மதிக்கும். பொறுப்பான குடிமகனைத்தான் (Citizen) நாடு மதிக்கும். அதிலும் முன்னுதாரணமாகத் (Role model) திகழும் மனிதனைத்தான் மக்கள் போற்றுவர். ஆகவே, நம் கழகத்தினர் இம்மூன்றாகவும் இருக்க வேண்டும் என்பதே என் பெருவிருப்பம்.
மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தொடங்கி, மாநாட்டில் பங்கேற்பது வரை நம் கழகத்தினர் ராணுவக் கட்டுப்பாட்டுடன் இயங்குவர் என்பதை இந்த நாடும் நாட்டு மக்களும் உணர வேண்டும். நாம் உணர வைக்க வேண்டும்.
நம் கழகம், மற்ற அரசியல் கட்சிகள் போல் சாதாரண இயக்கமன்று. இது ஆற்றல் மிக்கப் பெரும்படை. இளஞ்சிங்கப் படை. சிங்கப் பெண்கள் படை. குடும்பங்கள் இணைந்த கூட்டுப் பெரும்படை.
ஆகவே, நம்மிடம் உற்சாகம் இருக்கலாம். கொண்டாட்டம் இருக்கலாம். குதூகலம் இருக்கலாம். ஆனால், படையணியினர் ஓரிடத்தில் கூடினால், அந்த இடம் கட்டுப்பாடு மிக்கதாக மட்டுமில்லாமல் பக்குவம் நிறைந்ததாகவும் இருக்கும் என்பதையும் நாம் நிரூபித்துக் காட்ட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க : தொண்டர்களுக்கு விஜய் எழுதிய கடிதத்தின் முழு விவரம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.