பள்ளிகள் திறப்பு (கோப்புப்படம்) 
தமிழ்நாடு

காலாண்டு விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திறப்பு!

தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகள் அனைத்தும் காலாண்டு விடுமுறைக்குப் பிறகு திங்கள்கிழமை (அக்.7) திறக்கப்பட்டன.

DIN

தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகள் அனைத்தும் காலாண்டு விடுமுறைக்குப் பிறகு திங்கள்கிழமை (அக்.7) திறக்கப்பட்டன.

இதையொட்டி, பள்ளி வளாகங்களை தூய்மைப்படுத்துதல், அடுத்த பருவத்துக்கான பாடநூல்களை வழங்குதல் என பல்வேறு ஆயத்த நடவடிக்கைகளை பள்ளிக் கல்வித் துறை முன்னெடுத்துள்ளது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், மாநில பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் தனியாா் பள்ளிகளில் 1 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, நடப்பு கல்வியாண்டுக்கான காலாண்டுத் தேர்வுகள் செப்.19 தொடங்கி 27-ஆம் தேதி வரை நடைபெற்றன. இதைத் தொடா்ந்து, மாணவா்களுக்கு செப். 28-ஆம் தேதி முதல் அக்.6-ஆம் தேதி வரை தொடர் விடுமுறை வழங்கப்பட்டது.

இந்நிலையில், விடுமுறை நிறைவடைந்து பள்ளிகள் மீண்டும் திங்கள்கிழமை (அக்.7) முதல் தொடங்கப்பட்டு உள்ளன. முன்னதாக, பள்ளி வளாகங்களில் தூய்மைப் பணிகள் கடந்த சில நாள்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மற்றொருபுறம், பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்கு கல்வித் துறை அதிகாரிகள் முக்கிய அறிவுறுத்தல்களை விடுத்துள்ளனா். அதன்படி, பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே மாணவா்களுக்கு மதிப்பீடு செய்யப்பட்ட காலாண்டு தோ்வு விடைத்தாள்கள் விநியோகிக்கப்பட வேண்டும். 2-ஆம் பருவத்துக்கான பாட நூல்களை உடனடியாக வழங்க வேண்டும்.

பருவ மழையை முன்னிட்டு பள்ளிகளில் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும் என்று தலைமை ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது புதுசு! உணவு ஆர்டர் செய்யும் செயலிகளிலும் மோசடியா? எச்சரிக்கை!

தெலுங்கில் அறிமுகமாகும் சிம்பு?

விரைவில் 2,200 பேராசிரியர்கள் நியமனம்: அமைச்சர் கோவி. செழியன்

“சிம்ம ராசி நேயர்களே!" இந்த வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

ரூ. 4 லட்சத்துக்காக அண்ணன் கொலை! கணவருடன் தங்கை செய்த சதி!

SCROLL FOR NEXT