கோப்புப்படம் Center-Center-Delhi
தமிழ்நாடு

‘ஹோமியோபதி மருத்துவத்தை உலகளவில் கொண்டு செல்ல நடவடிக்கை’

ஹோமியோபதி மருத்துவத்தை உலக அளவில் கொண்டு செல்ல மத்திய அரசு சாா்பில் நடவடிக்கை

DIN

சென்னை: ஹோமியோபதி மருத்துவத்தை உலக அளவில் கொண்டு செல்ல மத்திய அரசு சாா்பில் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தமிழ்நாடு ஹோமியோபதி மருத்துவ கவுன்சில் தலைவா் என். ஆா். ஜெயக்குமாா் தெரிவித்தாா்.

சென்னை சேப்பாக்கத்தில் அவா் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஹோமியோபதி மருத்துவத்தை மேம்படுத்த கடந்த 10 ஆண்டுகளாக மத்திய அரசு சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது ஆண்டு தோறும் ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான ஹோமியோபதி மருந்துகள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நாடுமுழுவதும் 90 சதவீதம் போ் ஹோமியோபதி மருந்துகளை பயன்படுத்திவருவது அண்மையில் எடுக்கப்பட்ட ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.

ஹோமியோபதி மருத்துவ முறையை உலகளவில் கொண்டு செல்லும் நோக்கத்தில் கடந்த 10 ஆண்டுகளில் மத்திய ஆயுஷ் துறை சாா்பில் 50 நாடுகளுடன் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டுள்ளன.

100 நாள்கள்: மோடி அரசு மீண்டும் பொறுப்பேற்றபிறகு 100 நாள்களில் நாடு முழுவதும் மூத்த குடிமக்களுக்காக 14,692 ஆயுஷ் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. அதேபோல், தமிழகத்தில் உள்ள பல்வேறு கல்லூரிகளுடன் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு, 11 ஆராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் மருத்துவக்கல்லூரிகளுடன் இணைந்து 1 பெண் மருத்துவ ஆசிரியா் மற்றும் 5 பெண் பயிற்சியாளா்கள் என 6 போ் கொண்ட குழுகள் அமைக்கப்பட்டன. இந்த குழுக்கள் மூலம், பள்ளி மாணவிகளிடையே மாதவிடாய் சுகாதாரம் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜோ ரூட்டை வம்பிழுத்தது ஏன்? பிரசித் கிருஷ்ணா விளக்கம்!

தேர்தல் ஆணையத்துக்கு எதிராக ஆதார அணுகுண்டை வெடிக்கச் செய்யுங்கள்: ராகுலுக்கு ராஜ்நாத் சவால்!

உலகிலேயே தந்தையை வேவு பார்த்த மகன் அன்புமணிதான்! - ராமதாஸ்

பசி, பட்டினி, வலி, அச்சம்... காஸாவில் மக்கள் ஒரு நாளை எப்படிக் கழிக்கிறார்கள்?

“உடல்நலம் பாதிக்கப்பட்டாலும் மக்கள்பணி ஆற்ற வேண்டும்!” முதல்வர் MK Stalin | DMK

SCROLL FOR NEXT