ANI
தமிழ்நாடு

திருப்பதி செல்லும் ரயில்கள் ரத்து!

கவரப்பேட்டை அருகே ரயில் விபத்து... திருப்பதி செல்லும் ரயில்கள் ரத்து!

DIN

கவரப்பேட்டை அருகே வெள்ளிக்கிழமை(அக். 11) இரவு தடம் புரண்ட மைசூரு - தர்பங்கா பயணிகள் விரைவு ரயில்(12578) பெட்டிகளை அப்புறப்படுத்தி, ரயில் பாதையை சீரமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதையொட்டி, முக்கிய ரயில்கள் சில ரத்து செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,

  • இன்று(அக்.12) காலை 4 மணிக்கு, திருப்பதி ரயில் நிலையத்திலிருந்து புறப்பட வேண்டிய புதுச்சேரி மெமு (16111) ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

  • மறுமார்க்கத்தில், புதுச்சேரியிலிருந்து மாலை 3 மணிக்கு புறப்பட வேண்டிய திருப்பதி மெமு ரயில்(16112) ரத்து செய்யப்பட்டுள்ளது.

  • காலை 6.25 மணிக்கு புறப்பட வேண்டிய திருப்பதி - சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் (16204) ரயில் ரத்து.

  • மாலை 4.35 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை சென்ட்ரல் - திருப்பதி எக்ஸ்பிரஸ் (16203) ரயில் ரத்து.

  • காலை 6.25 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை சென்ட்ரல் - திருப்பதி எக்ஸ்பிரஸ் (16057) ரயில் ரத்து.

  • காலை 10.10 மணிக்கு புறப்பட வேண்டிய திருப்பதி - சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் (16054) ரயில் ரத்து.

  • பகல் 2.25 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை சென்ட்ரல் - திருப்பதி எக்ஸ்பிரஸ் (16053) ரயில் ரத்து.

  • மாலை 6.05 மணிக்கு புறப்பட வேண்டிய திருப்பதி - சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் (16058) ரயில் ரத்து.

  • காலை 7.10 மணிக்கு புறப்பட வேண்டிய அரக்கோணம் - புதுச்சேரி மெமு (16401) ரயில் ரத்து.

  • பகல் 2.30 மணிக்கு புறப்பட வேண்டிய கடப்பா- அரக்கோணம் மெமு (16402) ரயில் ரத்து.

  • காலை 9.50 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை சென்ட்ரல் - திருப்பதி மெமு (06727) ரயில் ரத்து.

  • பகல் 1.35 மணிக்கு புறப்பட வேண்டிய திருப்பதி - சென்னை சென்ட்ரல் மெமு (06728) ரயில் ரத்து.

  • காலை 9.15 மணிக்கு புறப்பட வேண்டிய அரக்கோணம் - திருப்பதி மெமு (06753) ரயில் ரத்து.

  • பகல் 3.45 மணிக்கு புறப்பட வேண்டிய திருப்பதி - அரக்கோணம் மெமு (06754) ரயில் ரத்து.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பற்றி எரியும் இந்தோனேசியா... நாடாளுமன்றக் கட்டடத்துக்கு தீ வைப்பு! 3 பேர் பலி!

உ.பி.: மது அருந்திய 2 பேர் பலி, ஒருவர் கவலைக்கிடம்!

அதீத வெப்பம்: தாமதமாக நடைபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள்!

மராத்தா இடஒதுக்கீடு போராட்டம்: மும்பையில் போலீஸாரின் விடுமுறைகள் ரத்து

லோகேஷ் கனகராஜுக்கு ஜோடியாகும் ரச்சிதா ராம்?

SCROLL FOR NEXT