முகப்பு
தமிழ்நாடு

இன்று முதல்.. ஒரு வாரம்: மழை நிலவரம் சொல்லும் செய்தி என்ன?

தமிழகத்தில் இன்று முதல் ஒரு வாரம் வரை மழை நிலவரம் சொல்லும் செய்தி என்ன?

Updated On : 12 அக்டோபர், 2024 at 8:27 AM
தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
பகிர்:

தமிழகத்தில் அக்.12ஆம் தேதியான இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், சனிக்கிழமை தமிழகத்தில் கோவை, நீலகிரி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய எட்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

அதுபோல, சென்னையில், அடுத்த 48 மணி நேரத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், தமிழகம், புதுவையில் அநேக மாவட்டங்களில் இன்று இடி மற்றும் மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதுபோல ஞாயிற்றுக்கிழமை, (அக்.13) 10 மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, தமிழகத்தில் கோவை, திருப்பூர், நீலகிரி, திண்டுக்கல், தேனி, மதுரை மாவட்டங்களிலும், விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 10 மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

அக். 14ஆம் தேதி அதாவது திங்கள்கிழமை தமிழகத்தில் இரண்டு மாவட்டங்களுக்கு மிக கனமழை வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், தஞ்சை, திருவாரூர், நாகை, அரியலூர், சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்.15ஆம் தேதி செவ்வாய்க்கிழமை சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. அதாவது, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்றும். அக். 16ஆம் தேதி வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்யும் என்றும், அக். 16ஆம் தேதி கோவை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதன்படி, தமிழகத்தில் அக். 17ஆம் தேதி வரை பரவலாக மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →