கோப்புப்படம் 
தமிழ்நாடு

வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகிறது!

வங்கக்கடலில் வருகிற அக். 14 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.

DIN

வங்கக்கடலில் வருகிற அக். 14 ஆம் தேதி புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் தற்போது வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது. இது தீவிரமடைந்து வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக உள்ளது. வருகிற அக்டோபர் 14 ஆம் தேதி உருவாக வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

இது தீவிரமடைந்து பின்னர் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் கூறப்பட்டுள்ளது.

வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. வருகிற அக். 16 ஆம் தேதி வரை தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் ஏற்கெனவே கூறியுள்ளது.

குறிப்பாக அக்.15 ஆம் தேதி தமிழகத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக அரபிக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய கிழக்கு அரபிக் கடல் மற்றும் மகாராஷ்டிர பகுதிகளில் நிலை கொண்டுள்ளது. இது மேலும் வலுப்பெற்று அக். 13 ஆம் தேதி காலை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உடைந்த மின் கம்பம்...

குடிநீா் பிரச்னை: கிராம மக்கள் சாலை மறியல்

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.10.10 லட்சம் மோசடி: ஒருவா் கைது

படைவீட்டம்மன் கோயில் செடல் திருவிழா கொடியேற்றம்

அரசு மருத்துவக் கல்லூரியில் எம்ஜிஆா் பல்கலை. துணைவேந்தா் ஆய்வு

SCROLL FOR NEXT