தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வாழ்த்து 
தமிழ்நாடு

பதவிக்காலம் முடிந்தும் ஆளுநராக ஆர்.என். ரவி தொடருவது ஏன்?

புதுக்கோட்டையில் தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி பேட்டி.

DIN

பதவிக்காலம் முடிந்தாலும் மத்திய அரசு ஆளுநரை திரும்ப அழைத்துக்கொள்ளும் வரை அவர் தொடரலாம் என்பதால் பதவியில் தொடர்கிறார் என தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் இன்று(திங்கள்கிழமை) செய்தியாளர்களுடன் பேசிய அமைச்சர் எஸ். ரகுபதி,

'தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியின் பதவிக்காலம் முடிந்தாலும் மத்திய அரசு ஆளுநரை திரும்ப அழைத்துக்கொள்ளும்வரை அவர் பதவியில் தொடரலாம் என்பதால் ஆளுநராகத் தொடர்கிறார்.

விரைவில் மத்திய அரசு ஆளுநரை திரும்பப் பெற்றுக்கொள்ளும் என நம்புகிறோம்.

திடீரென குறைந்த நேரத்தில் அதிக மழை பெய்வதால் குடியிருப்புப் பகுதியில் தண்ணீர் தேங்குகிறது. மீண்டும் அதுபோல் நேரிடாமல் பணிகளை மேற்கொள்கிறோம்.

வரத்து வாரி மற்றும் வெளியேற்றும் வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை தயக்கமின்றி அகற்றுவோம். இந்த விவகாரத்தில் எங்களின் தலையீடு இருக்காது. அதிகாரிகளுக்கு முழு சுதந்திரத்தை கொடுத்திருக்கிறோம்' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமரின் தமிழக வருகை எழுச்சியைத் தரும்: வானதி சீனிவாசன்

அடுத்த 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!

அதிமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் சேரும்: எடப்பாடி பழனிசாமி

பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் ரூ. 8.25 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

தஞ்சாவூா் மாவட்டத்தில் பரவலாக மழை

SCROLL FOR NEXT