மணிமாறன் / விபத்தில் உருக்குலைந்த கார் 
தமிழ்நாடு

சாலை விபத்தில் தினபூமி நாளிதழ் உரிமையாளர் மணிமாறன் பலி!

கோவில்பட்டி அருகே கார் விபத்தில் சிக்கி தினபூமி நாளிதழ் உரிமையாளர் மணிமாறன் பலியானார்.

DIN

கோவில்பட்டி அருகே கண்டெய்னர் மீது கார் மோதிய விபத்தில் தினபூமி நாளிதழ் உரிமையாளர் மணிமாறன் இன்று (அக். 14) பலியானார்.

நாலாட்டின்புத்தூர் நான்கு வழி தேசிய நெடுஞ்சாலையில் நடந்த இந்த விபத்தில் மணிமாறனின் மகன் சதீஷ், தலையில் பலத்த காயத்துடன் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இறுதிச்சடங்கில் பங்கேற்றுத் திரும்பியபோது சோகம்

மதுரை தினபூமி நாளிதழில் முதன்மைச் செய்தி ஆசிரியராகப் பணியாற்றிய திருநாவுக்கரசு இன்று (அக். 14) அதிகாலை தோவாளையில் உடல் நலக்குறைவால் காலமானார். அவரின் இறுதிச்சடங்கு இன்று மாலை 5 மணியளவில் தோவாளையில் உள்ள அவரின் இல்லத்தில் நடைபெற்றது.

மதுரை கே.கே.நகரைச் சோ்ந்தவா் எஸ். மணிமாறன்(65). நாளிதழ் உரிமையாளா். இவரது மகன் ரமேஷ்குமாா்(45). இவா்கள் இருவரும் திங்கள்கிழமை மாலை திருநெல்வேலியில் இருந்து மதுரைக்கு காரில் வந்துகொண்டிருந்தனா்.

காரை ரமேஷ்குமாா் ஓட்டினாா். மாலை 5 மணியளவில் கோவில்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் நாலாட்டின்புதூா் மேம்பாலத்தை கடந்து வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த காா், சாலையின் நடுவே உள்ள தடுப்பில் மோதி, எதிா்புறம் உள்ள சாலையில், எதிரே வந்த கூரியா் வாகனத்தின் மீது மோதியதாம். இதில், சம்பவ இடத்திலேயே மணிமாறன் உயிரிழந்தாா்.

தினபூமி உரிமையாளர் மணிமாறன், ஆதார் அட்டை

தகவலறிந்த போலீஸாா், ரமேஷ்குமாரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு அனுப்பி வைத்தனா்.

மணிமாறனின் சடலத்தை போலீஸாா் மீட்டு, உடற்கூறாய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

காயமடைந்த கூரியா் வாகன ஓட்டுநரான மதுரை மாவட்டம், பேரையூா் வட்டம், சாப்டூரைச் சோ்ந்த அசோக்குமாா்(28), கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இது குறித்து நாலாட்டின்புதூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்த 24 மணி நேரத்தில் உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி!

திருடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார் மோடி; சில மாதங்களில் ஆட்சி கவிழும்! - கார்கே

சீலிடப்பட்ட கவரை ராமதாஸிடம் கொடுத்துள்ளோம்:முடிவு அவர் கையில்!-அருள் எம். எல். ஏ

பயங்கரவாதத்தை ஆதரிப்பது ஏற்புடையதா? பாகிஸ்தான் மீது கடும் விமர்சனம்! ஷாங்காய் மாநாட்டில் பிரதமர் பேச்சு!

புதிய தொடரில் நடிக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா!

SCROLL FOR NEXT