மழை TNIE
தமிழ்நாடு

அடுத்த 2 மணிநேரத்துக்கு சென்னை, திருவள்ளூருக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளின் வானிலை நிலவரம்...

DIN

சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு செவ்வாய்க்கிழமை காலை 10 மணி வரை ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று வலுப்பெறும் நிலையில், திங்கள்கிழமை நள்ளிரவு முதல் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகின்றது.

ஆரஞ்சு அலர்ட்

இன்று காலை 10 மணி வரை சென்னை, திருவள்ளூர் மாவட்டத்துக்கு கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துணை முதல்வர் ஆய்வு

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இரவு முதல் கனமழை பெய்து வரும் நிலையில், பல்வேறு இடங்களில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விடியவிடிய ஆய்வு செய்தார்.

மேலும், கன மழை முன்னெச்சரிக்கைப் பணியில் ஈடுபட்டு வரும் பணியாளர்களை நேரில் சந்தித்து, அவர்களுக்கு சிற்றுண்டிகளை துணை முதல்வர் வழங்கினார்.

ரெட் அலர்ட்

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி சென்னை - நெல்லூர் நோக்கி நகரக் கூடும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களுக்கு நாளை(அக். 16) ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

SCROLL FOR NEXT