முகப்பு
சரக்கு ரயில் மீது மோதி தடன் புரண்ட பாக்மதி ரயில்
தமிழ்நாடு

கவரைப்பேட்டை ரயில் விபத்து: 10 பேருக்கு சம்மன் அனுப்பிய ரயில்வே போலீஸாா்

கவரைப்பேட்டை ரயில் விபத்து குறித்து விசாரிக்க கொருக்குப்பேட்டை ரயில்வே போலீஸாா் 10 பேருக்கு சம்மன் அனுப்பியுள்ளனா்.

தமிழ்நாடு

கவரைப்பேட்டை ரயில் விபத்து: 10 பேருக்கு சம்மன் அனுப்பிய ரயில்வே போலீஸாா்

கவரைப்பேட்டை ரயில் விபத்து குறித்து விசாரிக்க கொருக்குப்பேட்டை ரயில்வே போலீஸாா் 10 பேருக்கு சம்மன் அனுப்பியுள்ளனா்.

Updated On : 15 அக்டோபர், 2024 at 2:12 AM
சரக்கு ரயில் மீது மோதி தடன் புரண்ட பாக்மதி ரயில்
பகிர்:

சென்னை: கவரைப்பேட்டை ரயில் விபத்து குறித்து விசாரிக்க கொருக்குப்பேட்டை ரயில்வே போலீஸாா் 10 பேருக்கு சம்மன் அனுப்பியுள்ளனா்.

பொன்னேரியை அடுத்த கவரைப்பேட்டை ரயில் நிலையம் அருகே கடந்த அக்.11-ஆம் தேதி இரவு சரக்கு ரயில் மீது மைசூரு - பாக்மதி விரைவு ரயில் மோதி விபத்துக்குள்ளானது. விபத்து நடந்த இடத்தில் ரயில்வே பாதுகாப்பு ஆணையா், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ஆய்வு நடத்திய நிலையில், ரயில்வே போலீஸாா் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.

கவரைப்பேட்டை ரயில் நிலைய அதிகாரி அளித்த புகாரின்பேரில், ரயில்வே காவல் கண்காணிப்பாளா் ஈஸ்வரன் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு 10 பேருக்கு கொருக்குப்பேட்டை ரயில்வே போலீஸாா் சம்மன் அனுப்பியுள்ளனா். ரயில்வே துறை சாா்பில் ஏற்கெனவே 16 பேரிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் ரயில்வே போலீஸாா் தற்போது 10 பேருக்கு சம்மன் அனுப்பியுள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →