தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் அக்டோபர் 1-ஆம் தேதி முதல் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கடந்த இரண்டு நாள்களாக கனமழை பெய்து வருகின்றது.
கடந்த 13 நாள்களில் மட்டும் தமிழகத்தில் 100 மி.மீ. அளவுக்கு மழை பெய்துள்ளது.
தற்போது வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று சென்னை - நெல்லூர் கடற்கரையை நோக்கி அடுத்த 24 மணிநேரத்தில் நகரக் கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளுக்கு இன்றும் நாளையும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை முழுமையாக விலகியதாகவும், வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாகவும் இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.
தற்போது, தமிழகம், புதுச்சேரி, ஆந்திர கடலோரப் பகுதிகள், ராயலசீமா, தெற்கு உள்கர்நாடகம் மற்றும் கேரள மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.