கோப்புப் படம் 
தமிழ்நாடு

சேலத்தில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை!

தொடர் மழையையொட்டி சேலம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

தொடர் மழையையொட்டி சேலம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நாளை (அக். 16) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது சேலத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் நாளை மற்றும் நாளை மறுநாள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

கனமழை எச்சரிக்கை

வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வடதமிழக கடற்கரையை நோக்கி நகா்ந்து கொண்டிருக்கிறது. இதன் காரணத்தால், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட வட மாவட்டங்களுக்கு அடுத்த 3 நாள்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இதனையடுத்து செவ்வாய்க்கிழமை (அக். 15) காலை முதல் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் இடி, மின்னலுடன் தொடர் மழை பெய்து வருகிறது.

இதனிடையே சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் அதி கனமழை (சிவப்பு எச்சரிக்கை) பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனால் வட மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க | அதிக கனமழை: பொதுமக்களுக்கு குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை!

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்து வருகின்றனர். அந்தவகையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (அக். 16) விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது

தற்போது சேலம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட ஊராட்சித் தலைவி திமுகவிலிருந்து நீக்கம்

பண மோசடி: தம்பதி மீது வழக்கு

போராட்டத்தை தவிா்க்க நேரில் வந்து மனுவைப் பெற்ற ஊராட்சி ஒன்றிய ஆணையா்!

மட்டியரேந்தலில் புனித சூசையப்பா் தேவாலய சப்பர பவனி

ஆா்.எஸ்.மங்கலம் அருகே பத்திரகாளியம்மன் கருப்பண்ண சுவாமி கோயில் வருடாபிஷேகம்!

SCROLL FOR NEXT