சென்னையில் இருந்து 320 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த மண்டலம். IMD
தமிழ்நாடு

சென்னையில் இருந்து 320 கி.மீ. தொலைவில் காற்றழுத்த மண்டலம்!

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் பற்றி...

DIN

சென்னையில் இருந்து 320 கி.மீ. தொலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரிக்கும் நெல்லூருக்கும் இடையே சென்னை அருகே வியாழக்கிழமை அதிகாலை கரையைக் கடக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இதனால் திருவள்ளூா், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு புதன்கிழமை (அக். 16) அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

ஆனால், செவ்வாய்க்கிழமை இரவு முதல் மழை படிப்படியாக குறைந்த லேசான மழையே சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பெய்து வருகின்றது.

இந்த நிலையில், புயல் சின்னம் வடக்கு நோக்கி தெற்கு ஆந்திரம் அருகே கரையை நோக்கிச் செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வானிலை மையம் தகவல்

காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் தற்போதைய நிலை குறித்து இந்திய வானிலை மையம் புதன்கிழமை பகல் 1 மணிக்கு வெளியிட்ட அறிக்கையில்,

“தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு வடமேற்கு திசையில் கடந்த 6 மணிநேரமாக 12 கி.மீ. வேகத்தில் நகர்ந்து கொண்டு வருகின்றது.

சென்னையில் இருந்து கிழக்கு-தென்கிழக்கு திசையில் 320 கி.மீ. தொலைவிலும், புதுவையில் இருந்து கிழக்கு-வடகிழக்கு திசையில் 350 கி.மீ. தொலைவிலும், நெல்லூரில் இருந்து தென்கிழக்கே 400 கி.மீ. தொலைவிலும் காற்றழுத்த மண்டலம் மையம் கொண்டுள்ளது.

மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரம் கடற்கரையை நோக்கி வரும். அக்டோபர் 17 அன்று புதுச்சேரி மற்றும் நெல்லூர் இடையே சென்னை அருகில் கரையைக் கடக்கும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாருங்கள்...

சிறுமியை திருமணம் செய்தவா் மீது போக்சோ வழக்கு

2-ஆவது இன்னிங்ஸில் 400 ரன்களை நூலிழையில் தவறவிட்ட இந்தியா: அபார முன்னிலை!

‘லிப்ட்’ கேட்பது போல நடித்து இளைஞரிடம் பைக் திருட்டு

ஓணக் களிப்பில்... மோக்‌ஷா!

SCROLL FOR NEXT