சென்னையில் செவ்வாய்க்கிழமை பெய்த கனமழையால் தேங்கிய நீர். TNIE
தமிழ்நாடு

அடுத்த 2 மணிநேரத்துக்கு சென்னையில் மழை எப்படி இருக்கும்?

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள மழை எச்சரிக்கை பற்றி...

DIN

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளுக்கு அடுத்த 2 மணிநேரத்துக்கு மிதமான மழையே பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரிக்கும் நெல்லூருக்கும் இடையே சென்னை அருகே வியாழக்கிழமை அதிகாலை கரையைக் கடக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இதனால் திருவள்ளூா், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு புதன்கிழமை (அக். 16) அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

ஆனால், செவ்வாய்க்கிழமை இரவு முதல் மழை படிப்படியாக குறைந்த லேசான மழையே சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பெய்து வருகின்றது.

இதனிடையே, சென்னை அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது தெற்கு ஆந்திரம் நோக்கிச் செல்வதாக தனியார் வானிலை ஆராய்ச்சியாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், காலை 10 மணி வரை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களில் மிதமான மழையே பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், திருப்பத்தூர், விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் தேனி மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூா் சம்பவம்: அனைத்துக் கட்சியினா் மௌன ஊா்வலம்

மது விற்ற தம்பதி கைது

நெல் சேமிப்பு கிடங்கில் ஆட்சியா் ஆய்வு

தாயுமானவா் திட்டப் பயனாளிகளுக்கு அக்.5, 6-இல் ரேஷன் பொருள்கள் விநியோகம்

மயிலாடுதுறையில் அக்.11-இல் கிராமசபைக் கூட்டம்

SCROLL FOR NEXT