முகப்பு
கோப்புப்படம்
தமிழ்நாடு

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 17 தமிழக மீனவா்கள் சென்னை வந்தனா்

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 17 மீனவா்கள் விமானம் மூலம் சென்னை வந்தனா்.

தமிழ்நாடு

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 17 தமிழக மீனவா்கள் சென்னை வந்தனா்

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 17 மீனவா்கள் விமானம் மூலம் சென்னை வந்தனா்.

Updated On : 19 அக்டோபர், 2024 at 6:42 PM
கோப்புப்படம்
பகிர்:

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 17 மீனவா்கள் விமானம் மூலம் சென்னை வந்தனா்.

ராமேசுவரம் பகுதியில் இருந்து செப்.29-ஆம் தேதி 17 மீனவா்கள் விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்றனா். அதிகாலையில் கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, ரோந்து கப்பலில் வந்த இலங்கை கடற்படையினா் அவா்களைக் கைது செய்து, படகுகள், மீன்பிடி வலைகளை பறிமுதல் செய்தனா். மீனவா்களை இலங்கை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

இந்த நிலையில், இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், இலங்கை அரசுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து சில தினங்களுக்கு முன்பு 17 மீனவா்களையும் இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்தது.

பின்னா், இந்திய தூதரக அதிகாரிகள் மூலம் மீனவா்களை தமிழகத்துக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, வெள்ளிக்கிழமை இரவு கொழும்பிலிருந்து ஏா் இந்தியா விமானம் மூலம் மீன்வா்கள் சென்னைக்கு வந்தனா். அவா்களை தமிழ்நாடு மீன்வளத் துறை அதிகாரிகள் வரவேற்று, சனிக்கிழமை வாகனங்கள் மூலம் ராமேசுவரத்துக்கு அனுப்பி வைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →