முகப்பு
தமிழ்நாடு

ஆளுநர் ஆர்.என். ரவி சொன்னதும்.. உண்மையில் நடந்ததும்!

போதைப் பொருள் பறிமுதல் தொடர்பாக ஆளுநர் ஆர்.என். ரவி சொன்னது உண்மையில்லை என தகவல்.

Updated On : 19 அக்டோபர், 2024 at 9:25 AM
ஆளுநர் ஆர்.என். ரவி
பகிர்:

தமிழகத்தில் போதைப் பொருள் பறிமுதல் தொடர்பாக ஆளுநர் ஆர்.என். ரவி சொன்னது உண்மையல்ல என்று காவல்துறை வெளியிட்ட தரவுகள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக செயற்கையாக தயாரிக்கப்படும் போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்படவில்லை என்று ஆளுநர் ஆர்.என். ரவி கூறியிருந்த நிலையில் கிராம் அளவில் எல்லாம் இல்லை கிலோ கணக்கில் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை தரவு கூறுகிறது.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு, தென்காசியில் பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி சொன்ன தகவல் தவறானது என மாநில போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு வெளியிட்ட தரவுகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதாவது, தென்காசியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி, தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக, போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் ஒரு கிராம் செயற்கை போதைப் பொருளைக் கூட பறிமுதல் செய்யவில்லை, ஆனால், மத்திய புலனாய்வு அமைப்புகள் பல நூறு கிலோ எடையுள்ள போதைப் பொருள்களை பறிமுதல் செய்துள்ளனர் என்று கூறியிருந்தார்.

மாநிலத்தின் அமலாக்கத் துறை அமைப்பின் - சிஐடி பிரிவு, வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல்களில், தமிழக காவல்துறையால் மாநிலம் முழுவதும் சுமார் 65 கிலோ மெத்தாம்பெட்டமைன், 145 கிலோ கச்சா எபெட்ரைன், 9 கிலோ மெத்தகுலோன், 2.1 கிலோ எல்எஸ்டி மற்றும் 1.23 லட்சம் மாத்திரைகள் தமிழகம் முழுவதும் தமிழகக் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாமல், மாநில காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்படும் மெத்தாம்பெட்டமைன் அளவு தேசிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு பறிமுதல் செய்த அளவை விட அதிகமாக அதாவது, கடந்த 4 ஆண்டுகளில் மத்திய அமைப்பு பறிமுதல் செய்திருப்பது 160 கிலோ என்று தெரிய வந்துள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளில், மிகப்பெரிய அளவில் நடந்த இரண்டு போதைப்பொருள் கடத்தல்களை தடுத்து பறிமுதல் செய்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஆளுநர் ரவி பேசும்போது, ஒபியம், ஹெராயின், ஹாஷிஷ் போன்ற போதைப்பொருள்கள் பற்றியும் பேசினார். இந்த நிலையில், தமிழக காவல்துறையின் புள்ளிவிவரத்தில், 2021 முதல் 92.7 கிலோ ஹாஷிஷ், 43 கிலோ ஹெராயின், 0.489 கிராம் ஒபியம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.

நாகப்பட்டினத்தில், 75 கிலோ எடையுள்ள 180 கோடி மதிப்புள்ள ஹாஷிஷ் பறிமுதல் செய்யப்பட்டு இரண்டு பேர்கைது செய்யப்பட்டுள்ளனர்.

அது மட்டுமல்லாமல் போதைப் பொருள் கட்டதலில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து அவர்களது சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.

எனவே, ஆளுநர் ரவி சொன்னது போல, தமிழகத்தில் ஒரு கிராம் செயற்கைப் போதைப் பொருள் கூட பறிமுதல் செய்யப்படாமல் இல்லை. கிலோ கணக்கில் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →