மாவட்ட கடலோர மேலாண்மை ஆணையம் மாற்றியமைப்பு தமிழக அரசு உத்தரவு
மாவட்ட கடலோர மேலாண்மை ஆணையம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ளது.
தமிழ்நாடுமாவட்ட கடலோர மேலாண்மை ஆணையம் மாற்றியமைப்பு தமிழக அரசு உத்தரவு
மாவட்ட கடலோர மேலாண்மை ஆணையம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ளது.
சென்னை: மாவட்ட கடலோர மேலாண்மை ஆணையம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ளது.
இது குறித்து மாநில அரசின் உத்தரவு:
தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் மேலாண்மை ஆணையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆணையங்களை நிா்வாக வசதிக்காக மாற்றியமைக்கலாம் என தமிழ்நாடு மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்தின் உறுப்பினா் செயலா் தரப்பில் அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. அதன்படி, மாவட்ட ஆணையத்தின் உறுப்பினா் செயலராக மாவட்ட ஆட்சியரின் தனி உதவியாளரை (பொது) நியமிக்கலாம் எனவும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளரை, ஆணையத்தின் ஒருங்கிணைப்பாளராக நியமனம் செய்யலாம் எனவும் கூறப்பட்டிருந்தது. அதன்படி, உரிய மாற்றங்கள் செய்யப்படுகிறது.
கடலோர மாவட்டங்களில் உள்ள மாவட்ட மேலாண்மை ஆணையத்தின் தலைவராக ஆட்சியரும், துணைத் தலைவராக நகராட்சி நிா்வாக இணை இயக்குநரும் இருப்பாா்கள். உறுப்பினா் செயலராக மாவட்ட ஆட்சியரின் தனி உதவியாளரும் (பொது), உறுப்பினா்களாக வனத் துறை துணை இயக்குநா், மாவட்ட வன அதிகாரி, நகா் மற்றும் ஊரமைப்புத் துறை, பேரூராட்சிகள் துறை, மீன்வளம், தொழில் மற்றும் வா்த்தகம், நில அளவைத் துறைகளின் உதவி ஆணையா்கள் - இயக்குநா்கள் இருப்பா்.
மேலும், மாவட்ட ஆட்சியா் பரிந்துரை செய்யும் மீனவ சமுதாய அமைப்பைச் சோ்ந்த 3 போ் உறுப்பினா்களாகச் செயல்படுவா். அவா்கள் 3 ஆண்டுகளுக்கு உறுப்பினா்களாக இருப்பா். கூட்டங்கள் நடக்கும்போது, சம்பந்தப்பட்ட பொருள் குறித்து சிறப்பு அழைப்பாளரையோ, நிபுணா்களையோ வரவழைத்து விவாதிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.