தமிழ்நாடு உளவுத் துறை ஐ.ஜி. மாற்றம்!
தமிழ்நாடு உளவுத் துறை ஐ.ஜி. மாற்றப்பட்டுள்ளது தொடர்பாக...
தமிழ்நாடு உளவுத் துறை ஐ.ஜி. செந்தில்வேலனை மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து உளவுத் துறை ஐ.ஜி.யாக அவினாஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 23 ஆம்தேதி நடைபெறவுள்ளது. இதை வெளிப்படையாகவும் சுதந்திரமாகவும் நடத்த ஏதுவாக அண்மையில் தமிழக தலைமைச் செயலர், காவல்துறை தலைமை இயக்குநர், சென்னை மாநகர காவல்துறை ஆணையர் உள்ளிட்ட பொறுப்புகளுக்கு புதிய உயரதிகாரிகளை நியமித்து தலைமைத் தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்தது.
தமிழக பொறுப்பு டிஜிபியாக இருந்த வெங்கட்ராமனை மாற்றிவிட்டு மூத்த ஐபிஎஸ் அதிகாரி சந்தீப் ராய் ரத்தோரை தேர்தல் ஆணையம் நியமித்தது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், தமிழ்நாடு காவல் துறை உளவுத்துறை ஐ.ஜி. செந்தில் வேலன் மாற்றப்பட்டு, ஐ.ஜி. அவிநாஷ் குமாரை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தலுக்கு சில நாள்களே உள்ள நிலையில், தமிழ்நாடு உளவுத் துறை ஐ.ஜி. மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
The Election Commission has issued orders transferring Tamil Nadu Intelligence IG Senthilvelan.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.