கோப்புப்படம் Center-Center-Coimbatore
தமிழ்நாடு

தீபாவளிக்கு முந்தைய நாள் பொது விடுமுறை! புதுச்சேரி அரசு

தீபாவளிக்கு முந்தைய நாளான புதன்கிழமையும் பொது விடுமுறை அறிவிப்பு.

DIN

தீபாவளிக்கு முந்தைய நாளான அக்டோபர் 30-ஆம் தேதி பொது விடுமுறை அறிவித்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.

வருகின்ற 31-ஆம் தேதி வியாழக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், சொந்த ஊர்களுக்கு மக்கள் செல்லத் தொடங்கியுள்ளனர்.

பள்ளி, கல்லூரி மாணவர்கள், மக்களின் வசதிக்காக தீபாவளிக்கு மறுநாளான நவம்பர் 1-ஆம் தேதி ஏற்கெனவே அரசு விடுமுறை அளித்துள்ளது.

இந்த நிலையில், கடைசி நேரக் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக, தீபாவளிக்கு முந்தைய நாளான அக். 30ஆம் தேதி புதன்கிழமையும் புதுச்சேரி, காரைக்கால் மற்றும் யானம் மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அளித்து துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், பொதுப் பணித் துறை நிறுவனங்களுக்கு விடுமுறை அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அக்.30ஆம் தேதி விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக நவம்பர் 16 சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவட்டாறு அருகே தூக்கிட்டு தற்கொலை

விஜய் நியாயத்தைப் பேச வேண்டும்: அண்ணாமலை பேட்டி

இந்து மத துரோகிகள் திமுக, காங்கிரஸ்: அண்ணாமலை பேச்சு

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 2

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரா் டிஎஸ். டி சில்வா மறைவு!

SCROLL FOR NEXT