தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், இன்று(அக்.28) சவரனுக்கு ரூ. 360 குறைந்துள்ளது.
கடந்த வாரம், தொடர்ந்து அதிகரித்துவந்த தங்கத்தின் விலை புதிய உச்சத்தை அடைந்து, மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
இந்த வாரத் தொடக்க நாளான இன்று(திங்கள்கிழமை), சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ. 360 குறைந்து ரூ. 58,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், கிராமுக்கு ரூ. 45 குறைந்து ரூ. 7,315-க்கு விற்பனையாகிறது. இதனிடையே, வெள்ளியின் விலை மாற்றமின்றி, ஒரு கிராம் ரூ. 107-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் வேளையில் கடந்த சில நாள்களாக, ஆபரணத் தங்கத்தின் விலை விறுவிறுவென உயர்ந்து வந்தது மக்களை கவலையடைச் செய்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.