மாணவிக்கு பட்டமளிக்கும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி Din
தமிழ்நாடு

பாரதிதாசன் பல்கலை. பட்டமளிப்பு: ஆளுநர் பங்கேற்பு, உயர்கல்வி அமைச்சர் புறக்கணிப்பு!

பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் உயர்கல்வி அமைச்சர் பங்கேற்காதது பற்றி...

DIN

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெறும் பட்டமளிப்பு விழாவில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றுள்ள நிலையில், உயர்கல்வி அமைச்சர் கோவி.செழியன் புறக்கணித்துள்ளார்.

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 39 ஆவது பட்டமளிப்பு விழா வரும் செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு நடைபெற்றது. இந்த விழாவில் 520 மாணவ, மாணவிகளுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி பட்டங்களை வழங்கினார்.

இந்த நிலையில், விழாவில் தமிழக உயா்கல்வித் துறை அமைச்சரும், பல்கலைக்கழக இணைவேந்தருமான கோவி. செழியன் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளார்.

உயர்கல்வித் துறை அமைச்சராக கோவி. செழியன் பொறுப்பேற்ற பிறகு, தமிழக ஆளுநருடன் இணைந்து பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றிருந்தார்.

இந்த நிலையில், ஆளுநர் பங்கேற்ற நிகழ்வில் தமிழ்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டதை கண்டித்து, அவர் பங்கேற்ற மனோன்மணியம் சுந்தரனார் பல்கைலை. பட்டமளிப்பு விழாவை புறக்கணித்தார்.

தற்போது திருச்சி பாரதிதாசன் பல்கலை, பட்டமளிப்பு விழாவையும் கோவி.செழியன் புறக்கணித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயில்வே மேம்பாலம் சீரமைப்பு பணி ஆய்வு

நாகை: 69,469 மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் நகா்வு

நாகையில் கந்தசஷ்டி வேல்பூஜை

கடலில் மாயமான இளைஞா் சடலமாக மீட்பு

நாசரேத்தில் 1 லட்சம் பனை விதைகள் விதைக்கும் திட்டம் தொடக்க விழா!

SCROLL FOR NEXT