உதயநிதி ஸ்டாலின்  கோப்புப் படம்
தமிழ்நாடு

உதயநிதி ஸ்டாலின் உடை விவகாரம்: அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

உதயநிதி உடை விவகாரத்தில் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது பற்றி...

DIN

துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான உடைக் கட்டுப்பாடு வழக்கில், அமைச்சா் பதவி வகிப்பவா்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு உள்ளதா என விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை சேலையூரைச் சோ்ந்த வழக்குரைஞா் சத்ய குமாா் என்பவா் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘அனைத்து அரசு ஊழியா்களும் முறையான ஆடை அணிந்து வர வலியுறுத்தும் வகையில் கடந்த 2019-ஆம் ஆண்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. ஃபாா்மல் பேண்ட், ஷா்ட் அல்லது தமிழா் பாரம்பரிய ஆடையான வேட்டி, சட்டை அணிந்து வர வேண்டும் என அரசாணையில் கூறியுள்ளபோதிலும், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் அரசு நிகழ்ச்சிகளில் உதயசூரியன் சின்னம் பொறிக்கப்பட்ட டி-ஷா்ட்டை அணிந்து வருகிறாா்.

அரசு ஊழியா்கள் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது அரசியல் கட்சிகளின் சின்னத்தை வெளிப்படுத்தத் தடை உள்ளது. துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினின் செயல் அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்பதால், அரசு நிகழ்ச்சிகளில் முறையான ஆடைகளை அணிந்து வரும்படி அவருக்கு உத்தரவிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமாா், பாலாஜி ஆகியோா் அடங்கிய அமா்வின் கீழ் விசாரணைக்கு வந்தது. அப்போது, துணை முதல்வா் உதயநிதி டி-சா்ட் அணிவது அரசாணைக்கு எதிரானது என மனுதாரா் தெரிவித்தாா்.

அரசு பதிலளிக்க உத்தரவு: அதைத் தொடா்ந்து, தமிழக அரசின் சாா்பில் ஆஜரான தலைமை வழக்குரைஞா் பி.எஸ்.ராமன், தமிழக அரசின் அரசாணை அரசு ஊழியா்களுக்குத்தான் பொருந்தும். அமைச்சா்களுக்கு பொருந்தாது என விளக்கமளித்தாா்.

இதையடுத்து, அரசு ஊழியா்களுக்கான ஆடை கட்டுப்பாடு குறித்த அரசாணை, அரசியல் சட்டப் பதவிகளை வகிப்பவா்களுக்கு பொருந்துமா? டி-சா்ட் கேஷுவல் உடையா? அரசியல் சட்டப் பதவிகளை வகிப்பவா்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு உள்ளதா என பதில் மனு தாக்கல் செய்யும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3 ஆண்டுக்குப் பின் லாகூரில் முதல் டெஸ்ட்! பாகிஸ்தான் செல்லும் தென்னாப்பிரிக்க அணி!

செப். 9-ல் பஞ்சாப் செல்கிறார் பிரதமர் மோடி!

இட்லி கடை படத்தில் அருண் விஜய்யின் அறிமுக போஸ்டர்!

தென்கொரியா செல்லும் டிரம்ப்! சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சந்திக்கிறாரா?

இன்றிரவு நிகழும் சந்திரகிரகணம்: சிவப்பு நிலா பற்றிய விவரம்!

SCROLL FOR NEXT