ரயில் நிலையத்தில் அலைமோதும் கூட்டம் கோப்புப் படம்
தமிழ்நாடு

தீபாவளி: இன்றிரவு முன்பதிவில்லா 3 சிறப்பு ரயில்கள் இயக்கம்!

தீபாவளியையொட்டி சொந்த ஊர் செல்லும் மக்களின் வசதிக்காக முழுக்க முன்பதிவு இல்லா 3 சிறப்பு ரயில்கள் இன்று இரவு இயக்கப்பட உள்ளன.

DIN

தீபாவளியையொட்டி சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக முழுக்க முன்பதிவு இல்லா 3 சிறப்பு ரயில்கள் இன்று (அக். 30) இரவு இயக்கப்பட உள்ளன.

தீபாவளி பண்டிகையையொட்டி ஏராளமான மக்கள் சென்னையிலிருந்து தங்கள் சொந்த ஊர்களுக்காக பல்வேறு மாவட்டங்களுக்கு பயணித்து வருகின்றனர்.

தீபாவளியை முன்னிட்டு ரயில்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை குறைக்கும் பொருட்டு முக்கிய வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இந்த ஆண்டு தீபாவளியையொட்டி 48 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. இந்த ரயில்கள் 258 முறை மறுமார்க்கத்தில் இயக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தது.

இதில் ஏராளமான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குப் பயணித்தனர். எனினும் எஞ்சியுள்ளவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல வசதியாக இன்று முன்பதிவில்லாத 3 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதன்படி, எழும்பூரில் இருந்து (06155) இரவு 9.10 மணிக்கு விழுப்புரம், சிதம்பரம் வழியே திருச்சிக்கும், தாம்பரத்தில் இருந்து (06157) இரவு 12.30க்கு விழுப்புரம், அரியலூர் வழியே திருச்சிக்கும், சென்னை சென்ட்ரலில் இருந்து (06159) இரவு 10.10க்கு அரக்கோணம், திருப்பூர் வழியே கோவை போத்தனூருக்கும் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இதையும் படிக்க | சென்னையில் கனமழை தொடரும்: வானிலை ஆய்வு மையம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“H FILES” ஹரியாணாவில் 25 லட்சம் போலி வாக்காளர்கள்! ஆதாரங்களை வெளியிட்டார் ராகுல்காந்தி!

600 பேருக்கு வேலைவாய்ப்பு! வேலூரில் மினி டைடல் பூங்கா திறப்பு!

ஆஷஸ் தொடருக்கான ஆஸி. அணி அறிவிப்பு! கேப்டனாக ஸ்மித்.. மீண்டும் மார்னஸ் லபுஷேனுக்கு வாய்ப்பு!

பிக் பாஸ் 9 நேரலையும் எடிட் செய்யப்படுகிறதா?

பாஜகவின் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜேன் ஏஜேபி கட்சியில் இணைந்தார்!

SCROLL FOR NEXT