தீபாவளி பண்டிகை ANI
தமிழ்நாடு

தீபாவளி.. கடைசி நேர ஷாப்பிங்கை மந்தமாக்கிய மழை!

தீபாவளிக்கு முந்தைய நாளான இன்று கடைசி நேர ஷாப்பிங்கை மந்தமாக்கியது மழை.

DIN

தீபாவளிக்கு முந்தைய நாள் கூட்டமில்லாமல், இருக்கும் என்பதாலே பலரும் கடைசி நேரத்தில் ஷாப்பிங் செய்வதை வழக்கமாக்கிக் கொண்டிருப்பார்கள்.

அதுபோல, புதன்கிழமை மதியத்துக்கு மேல் கடைகளுக்குச் சென்று பொருள்கள் வாங்க திட்டமிட்டிருந்தவர்களின் திட்டத்தில் பேரிடியாக வந்தது பகல் நேரத்து மழை.

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை முற்பகலுக்குப் பின் வானம் மேகமூட்டமாக மாறியது. 12 மணிக்கெல்லாம் பரவலாக மழை பெய்யத் தொடங்கியது.

சற்று லேசாகத் தொடங்கி 2 மணி நேரத்துக்கு மேல் பலத்த மழை பெய்ததால், சாலைகளில் ஆறு போல மழை நீர் ஓடியது. இதனால், மதியம் சந்தைகளுக்குச் சென்று பொருள்கள் வாங்கத் திட்டமிட்டிருந்தவர்களுக்கு என்ன செய்வதென்று தெரியாமல் போனது.

பலரும் பட்டாசு, காய்கறிகள், ஆடைகள் வாங்க திட்டமிட்டிருந்த நிலையில், சந்தைகளிலும், அதிக கூட்டம் வரும் என வியாபாரிகள் காத்திருந்தனர். ஆனால் வந்தது என்னவோ மழைதான்.

தற்போது மழை ஓய்ந்து ஓரளவுக்கு மக்கள் வெளியே வரத் தொடங்கினாலும், கடைசி நேரத்து ஷாப்பிங் மந்தமாக இருப்பதாகவே கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிமுகவை ஆா்எஸ்எஸ் வழிநடத்துவதில் என்ன தவறு? மத்திய இணையமைச்சா் எல்.முருகன் கேள்வி

சுனாமி ஒத்திகை: ஆட்சியா் ஆலோசனை

நீடாமங்கலம் பகுதி கோயில்களில் விநாயகா் சதுா்த்தி

வேளாங்கண்ணிக்கு திரளானோா் பாத யாத்திரை

காரைக்கால் கோயிலில் விநாயகா் சதுா்த்தி வழிபாடு

SCROLL FOR NEXT