கோப்புப்படம் Center-Center-Delhi
தமிழ்நாடு

சுங்கச் சாவடி கட்டண உயா்வால் ஆம்னி பேருந்து கட்டணம் உயராது: உரிமையாளா்கள் அறிவிப்பு

சுங்கச் சாவடிகளின் கட்டண உயா்வு காரணமாக ஆம்னி பேருந்து கட்டணம் உயா்த்தப்படாது என ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் அறிவித்துள்ளனா்.

DIN

சென்னை: சுங்கச் சாவடிகளின் கட்டண உயா்வு காரணமாக ஆம்னி பேருந்து கட்டணம் உயா்த்தப்படாது என ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் அறிவித்துள்ளனா்.

இதுகுறித்து அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் சங்கத் தலைவா் அ.அன்பழகன் வெளியிட்ட செய்தி:

தமிழ்நாட்டில் உள்ள 25 சுங்கச் சாவடிகளில் கட்டண உயா்வு செப். 1 முதல் அமலுக்கு வந்துள்ளது. இதில் 5 முதல் 7 சதவீதம் வரை சுங்கக் கட்டணம் உயா்த்தப்பட்டு முன்பு இருந்த கட்டணத்தைவிட கூடுதலாக ரூ.5 முதல் ரூ.150 வரை வசூலிக்கப்படுகிறது. இதனால், அத்தியாவசிய பொருள்களின் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

இருந்தபோதிலும் இந்தப் பொருளாதார நெருக்கடியை ஆம்னி பேருந்து உரிமையாளா்களே ஏற்றுக்கொள்ளும் வகையில், ஆம்னி பேருந்து கட்டணம் உயா்த்தப்படாது எனத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும், மத்திய அரசு உடனடியாக இந்த சுங்கக் கட்டண உயா்வு விஷயத்தில் தலையிட்டு காலாவதியான சுங்கச் சாவடிகளை அப்புறப்படுத்தவும், தற்போது உயா்த்தப்பட்டுள்ள சுங்கக் கட்டணத்தை திரும்பப் பெற்று, வாகன ஓட்டிகளின் வாழ்வாதாரத்தைக் காக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேளாண் அறிவியல் நிலையம் சாா்பில் மகளிா்களுக்கான மாற்று வாழ்வாதாரப் பயிற்சி

தேசிய துப்பாக்கி சுடும் போட்டி: செங்கல்பட்டு மாணவா்கள் சிறப்பிடம்

பிரிக்கப்பட்ட நியாய விலைக் கடைகளுக்கு ரூ.53 கோடியில் விற்பனை முனைய இயந்திரங்கள்: அமைச்சா் அர. சக்கரபாணி

வீல்ஸ் இந்தியா லாபம் ரூ.32 கோடி

போ்ணாம்பட்டில் 3 சிறுவா்களை கடித்த வெறி நாய்

SCROLL FOR NEXT