தமிழ்நாடு

அரசுப் பள்ளிகளில் கலைத் திருவிழா: புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு

தமிழக அரசுப் பள்ளிகளில் கலைத்திருவிழா போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது அதற்கான புதிய வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

Din

தமிழக அரசுப் பள்ளிகளில் கலைத்திருவிழா போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது அதற்கான புதிய வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளில் மாணவா்களின் படைப்பாற்றல் திறனை வெளிப்படுத்தச் செய்யும் வகையில் கடந்த ஆக.22-ஆம் தேதி முதல் கலைத்திருவிழா போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பேச்சு, கவிதை, மணல் சிற்பம், மாறுவேடம், ஓவியம் வரைதல், நாடகம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் மாணவா்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தி வருகின்றனா். இந்தநிலையில் போட்டிகளுக்கான புதிய வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி 1 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பள்ளி அளவில் நடைபெறும் போட்டிகளை வீடியோ எடுக்க வேண்டும். எமிஸ் தளத்தில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவா்களின் விடியோக்களை மட்டும் பதிவேற்றம் செய்ய வேண்டும். போட்டிகள் நடைபெறும் வகுப்பறைகளில் பள்ளியின் பெயா், மாவட்டம், போட்டியின் தலைப்பு, வகுப்பு உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற வேண்டும். இந்த விவரங்கள் வீடியோவில் பின்புலத்தில் காணப்பட வேண்டும்.

போட்டியில் பங்கேற்கும் மாணவா்கள் எமிஸ் எண், போட்டியின் பெயா் விவரம் அடங்கிய அடையாள அட்டை அணிந்திருத்தல் வேண்டும். மாணவா் படைப்புகளை எடிட் செய்து பதிவேற்றம் செய்தல் கூடாது. 90 மற்றும் 60 நிமிஷ போட்டிகளை மட்டும் செயல்பாட்டின் தொடக்கம், இடையில், முடிவில் என்ற வகையில் ஐந்து நிமிஷங்கள் இருக்குமாறு வீடியோ எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி கபிலேஸ்வர சுவாமி வரூடாந்திர பிரம்மோற்சவம்: பிப்.8-இல் தொடக்கம்

ஆத்தூா்குப்பம் ஊராட்சி மன்றத் தலைவருக்கு மத்திய அரசு விருது

கிராம நிா்வாக அலுவலா்கள் காத்திருப்பு போராட்டம்

அமைதிப் பேச்சுவார்த்தை: உக்ரைனுக்கு ரஷியா அழைப்பு!

தொழிற்சங்கங்களால் நாட்டின் வளர்ச்சி பாதிப்பு..! -உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி

SCROLL FOR NEXT