முகப்பு
குழந்தையின் படம்
தமிழ்நாடு

சென்னை நந்தனம் அருகே குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட ஒரு மாத பெண் குழந்தை!

சென்னை நந்தனம் அருகே குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட ஒரு மாத பெண் குழந்தை குறித்து காவல்துறை விசாரணை

தமிழ்நாடு

சென்னை நந்தனம் அருகே குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட ஒரு மாத பெண் குழந்தை!

சென்னை நந்தனம் அருகே குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட ஒரு மாத பெண் குழந்தை குறித்து காவல்துறை விசாரணை

Updated On : 6 செப்டம்பர், 2024 at 6:12 AM
குழந்தையின் படம்
பகிர்:

சென்னை: சென்னை நந்தனம், சிஐடி நகர் அருகே, குப்பைத் தொட்டியில், பிறந்து ஒரு மாதம் ஆன பெண் குழந்தையை யாரோ வீசிச் சென்றிருக்கிறார்கள். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சென்னை நந்தனம் சி.ஐ.டி நகர் 4 வது பிரதான சாலையில் உள்ள குப்பைத் தொட்டியில் நேற்று இரவு 8 மணியளவில் குழந்தை அழும் சப்தம் கேட்டுள்ளது.

அப்போது அருகிலுள்ள மெக்கானிக் கடை உரிமையாளர் கலியபெருமாள் என்பவர் குப்பைத் தொட்டி அருகே சென்று பார்த்தபோது அங்கு ஒரு மாத பெண் குழந்தை இருந்தது தெரியவந்தது.

உடனடியாக கலியபெருமாள் அருகில் உள்ள சைதாப்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.

தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து குழந்தையை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்து குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

சிசிடிவி காட்சி

மேலும் சைதாப்பேட்டை போலீசார் அங்கு இருக்கக்கூடிய சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை செய்த போது இளம்பெண் ஒருவர் குழந்தையை குப்பைத் தொட்டியில் வீசிச் சென்றது தெரியவந்தது.

இது தொடர்பாக சைதாப்பேட்டை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →