முகப்பு
தமிழ்நாடு

படப்பிடிப்பு ரத்து உத்தரவை மறுபரிசீலனை செய்ய தயாரிப்பாளர் சங்கத்துக்கு நடிகர் சங்கம் வலியுறுத்தல்

படப்பிடிப்பு ரத்து உத்தரவால் வேலைநிறுத்தம் ஏற்படக்கூடிய சூழல் ஏற்படும் என்று நடிகர் சங்கம் வலியுறுத்தல்

Updated On : 7 செப்டம்பர், 2024 at 10:40 AM
பகிர்:

நவம்பர் 1-ம் தேதி முதல் படப்பிடிப்பு ரத்து என்ற தயாரிப்பாளர் சங்க உத்தரவினை மறுபரிசீலனை செய்ய நடிகர் சங்கம் வலியுறுத்தி இருக்கிறது.

நடிகர்கள் சம்பள உயர்வு, ஓடிடி மற்றும் தொலைக்காட்சி உரிமம் விற்பனையில் சிக்கல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை பேசித் தீர்க்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்தது. இதனை முன்னிட்டு நவம்பர் 1-ம் தேதி முதல் எந்தவொரு படப்பிடிப்பும் நடைபெறாது எனவும், புதிய படங்களுக்கு பூஜை போடப்படாது என தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்தது.

இதனால் மீண்டுமொரு வேலைநிறுத்தம் ஏற்படக்கூடிய சூழல் ஏற்பட்டது. இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று நடிகர் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் வலியுறுத்தி இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.