சென்னை, 14 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் இரவு 7 மணி வரை சென்னை உள்பட 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடுசென்னை, 14 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் இரவு 7 மணி வரை சென்னை உள்பட 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இரவு 7 மணி வரை சென்னை உள்பட 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, கோவை, நீலகிரி, ஈரோடு, தேனி, வேலூர், கடலூர், விழுப்புரம், ராணிப்பேட்டை, திண்டுக்கல் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், நேற்று(7-09-2024) காலை வடமேற்கு மற்றும் அதனையொட்டியுள்ள மத்திய வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்ததாழ்வு பகுதி, இன்று(8-09-2024) காலை 5.30 மணியளவில் மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுபெற்று, வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை 8.30 மணி அளவில் கலிங்கப்பட்டினத்திற்கு(ஆந்திரம்) கிழக்கே 280 கீ.மீ, கோபால்பூற்கு(ஒடிசா) கிழக்கு-தென்கிழக்கே 230 கீ.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு திசையில் நகர்ந்து வடக்கு ஒடிசா-மேற்கு வங்கம் கடற்கரை பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுப்பெறக்கூடும். மேலும் இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, 9ஆம் தேதி மாலை-இரவு நேரத்தில் ஒடிசா மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்க கடற்கரையை பூரி(ஒடிசா)-தீகா(மேற்கு வங்கம்) இடையே கடக்க கூடும்.
8-9-2024 மற்றும் 9-09-2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் வலுவான தரைக்காற்று 30-40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான-மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.