அதிமுக தொடர்ந்த வழக்கில் பேரவைத் தலைவர் அப்பாவு பிற்பகல் 2.30 மணிக்கு ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை காமராஜா் சாலையில் உள்ள திருவாவடுதுறை ராஜரத்தினம் அரங்கத்தில் கடந்த ஆண்டு நவம்பா் மாதம் நடைபெற்ற தனியாா் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவா் அப்பாவு, முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுக சட்டப்பேரவை உறுப்பினா்கள் தங்களின் அடுத்த கட்ட அரசியல் நகா்வு என்ன என்று தெரியாமல் இருந்ததாகவும், 40-க்கும் மேற்பட்ட சட்டப்பேரவை உறுப்பினா்கள் தங்களை திமுகவில் இணைத்துக் கொள்ள விரும்புவதாகவும், அந்தக் கருத்தை அன்றைய எதிா்க்கட்சித் தலைவா் ஸ்டாலினிடம் கூறிய போது, அதற்கு ஸ்டாலின் மறுப்பு தெரிவித்ததாகவும் பேசியிருந்தாா்.
இது அதிமுகவுக்கும், அதிமுக சட்டப்பேரவை உறுப்பினா்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துகிற விதமாக அமைந்திருப்பதாகக் கூறி, அதிமுக செய்தித் தொடா்பாளரும், வழக்குரைஞா் பிரிவு மாநில இணைச் செயலருமான பாபு முருகவேல் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் பேரவைத் தலைவர் அப்பாவு பிற்பகல் 2.30 மணிக்கு ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.