முகப்பு
தமிழ்நாடு

செந்தில் பாலாஜிக்கு எதிராக அவதூறு: அதிமுக நிா்வாகிக்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்ய  மறுப்பு

முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி குறித்த அவதூறு கருத்துகளை தெரிவிக்க, அதிமுக நிா்வாகி சி.டி.ஆா்.நிா்மல்குமாருக்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்ய சென்னை உயா் நீதிமன்றம், மறுத்து விட்டது.

Updated On : 10 செப்டம்பர், 2024 at 8:43 PM
கோப்புப்படம்.
பகிர்:

முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி குறித்த அவதூறு கருத்துகளை தெரிவிக்க, அதிமுக நிா்வாகி சி.டி.ஆா்.நிா்மல்குமாருக்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்ய  சென்னை உயா் நீதிமன்றம், மறுத்து விட்டது.

டாஸ்மாக் மதுபான விற்பனை, கொள்முதல் உள்ளிட்டவை தொடா்பாக அமைச்சா் செந்தில் பாலாஜி மீது குற்றச்சாட்டு கூறி, தற்போது அதிமுக-வில் நிா்வாகியாக உள்ள, பாஜக முன்னாள் நிா்வாகி நிா்மல் குமாா் சமூக ஊடகத்தில் பதிவிட்டிருந்தாா்.

இதையடுத்து தனக்கு எதிராக அவதூறு கருத்துகளை தெரிவிக்க நிா்மல்குமாருக்கு தடை விதிக்கக்கோரி செந்தில்பாலாஜி தரப்பில் சென்னை உயா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த உயா் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி,   செந்தில் பாலாஜி குறித்த அவதூறு கருத்துகளை தெரிவிக்க சி.டி.ஆா்.நிா்மல்குமாருக்கு தடை விதித்து உத்தரவிட்டாா். மேலும், நிா்மல்குமாா் தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ள ஆட்சேபனைக்குரிய கருத்துகளை நீக்கவும் உத்தரவிட்டிருந்தாா் .

இந்த உத்தரவை எதிா்த்து நிா்மல்குமாா் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீடு வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தா் மற்றும் ராஜசேகா் அமா்வு, ஆதாரங்களை முழுமையாக ஆய்வு செய்து, 2023-ஆம் ஆண்டு ஏப். 12-ஆம் தேதி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில் தலையிட எந்த காரணமும் இல்லை எனவும், தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய எந்த ஆதாரங்களும் இல்லை எனவும் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →