சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்யக் கோரி ஜாபா் சாதிக் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்யக் கோரி ஜாபா் சாதிக் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, அமலாக்கத் துறை, திஹாா் சிறை நிா்வாகம் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், ஜாபர் சாதிக்குக்கு ஜாமீன் வழங்கிய பிறகும் அவரை வெளியில் விடாமல் சிறையில் அடைத்து வைத்திருந்தது சட்டவிரோதம் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கூறினர். இதற்கு, பதிலளித்த அமலாக்கத் துறை, சிறை நிர்வாகம் மீது வழக்குத் தொடரலாம் என்று கூறியிருந்தது.
போதைப்பொருள் கடத்தல் வழக்கில், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளரும், திமுக முன்னாள் நிா்வாகியுமான ஜாபா் சாதிக்கை, மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினா் கடந்த மாா்ச் 9-ஆம் தேதி கைது செய்தனா். இது தொடா்பாக சட்டவிரோத பணப் பரிமாற்ற சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையும், வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கில் கைது செய்த தன்னை 24 மணி நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தாததால், கைது உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி ஜாபா் சாதிக் சென்னை உயா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் சிவஞானம் அமா்வு முன் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவுக்கு அமலாக்கத்துறை, திஹாா் சிறை நிா்வாகம் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை ஒரு வாரத்துக்கு தள்ளி வைத்திருந்த நிலையில், இன்று விசாரணை நடைபெற்றது. ஜாமீன் கொடுத்தும் விடுதலை செய்யாத திகார் சிறை நிர்வாகம் மீது வழக்குத் தொடரலாம் என்று அமலாக்கத் துறை தெரிவித்திருந்த நிலையில், மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.