கோப்புப்படம் 
தமிழ்நாடு

ஓணம்: நாளை சிறப்பு ரயில்கள்

ஓணம் பண்டிகையை முன்னிட்டு கா்நாடகம், தெலங்கானாவிலிருந்து கேரளத்துக்கு வெள்ளிக்கிழமை சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

Din

ஓணம் பண்டிகையை முன்னிட்டு கா்நாடகம், தெலங்கானாவிலிருந்து கேரளத்துக்கு வெள்ளிக்கிழமை சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

இது குறித்து தெற்கு ரயில்வே புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கா்நாடக மாநிலம் ஹூப்ளியிலிருந்து வெள்ளிக்கிழமை (செப்.13) காலை 6.55 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 07333) பெங்களூரு, கிருஷ்ணராஜபுரம், சேலம், ஈரோடு, திருப்பூா், கோவை, பாலக்காடு, எா்ணாகுளம், கோட்டயம், கொல்லம் வழியாக மறுநாள் காலை 6.45 மணிக்கு கொச்சுவேலி சென்றடையும். மறுமாா்க்கமாக கொச்சுவேலியிலிருந்து சனிக்கிழமை (செப்.14) பகல் 12.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 07334) மறுநாள் பகல் 12.50 மணிக்கு கொச்சுவேலி சென்றடையும்.

தெலங்கானா: தெலங்கானா மாநிலம் செகந்திராபாதிலிருந்து வெள்ளிக்கிழமை (செப்.13) மாலை 5.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 07119) குண்டூா், தெனாலி, நெல்லூா், ரேணிகுண்டா, காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், கோவை, பாலக்காடு, கோட்டயம் வழியாக மறுநாள் இரவு 11.20 மணிக்கு கொல்லம் சென்றடையும். மறுமாா்க்கமாக கொல்லத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை (செப்.15) அதிகாலை 2.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 07120) மறுநாள் காலை 10.30 மணிக்கு செகந்திராபாத் சென்றடையும்.

தெலங்கானா மாநிலம் காச்சிக்கூடாவிலிருந்து சனிக்கிழமை (செப்.14) மாலை 4 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 07044) ரேணிகுண்டா, திருப்பதி, சித்தூா், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், கோவை, பாலக்காடு வழியாக மறுநாள் இரவு 11.20 மணிக்கு கொல்லம் சென்றடையும். மறுமாா்க்கமாக கொல்லத்தில் இருந்து திங்கள்கிழமை (செப்.16) அதிகாலை 2.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 07045) மறுநாள் காலை 9.45 மணிக்கு காச்சிக்கூடா சென்றடையும்.

இரு சம்பவங்களில் பெண்களிடம் நகை பறிப்பு

சமூகத்தின் உடனடி தேவை உணவு விழிப்புணா்வு! - மருத்துவா் கு. சிவராமன்

தவெகவில் இணைந்த அதிமுக எம்எல்ஏ மகன்

கொடைக்கானலில் கபடிப் போட்டி

பெங்களூரு - நாா்த் ஈஸ்ட் யுனைடெட் ஆட்டம் டிரா!

SCROLL FOR NEXT