தமிழகத்தில் ரூ. 500 கோடி முதலீடு செய்ய கேட்டர்பில்லர் நிறுவனத்துடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதன்மூலம், திருவள்ளூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள தங்களின் கட்டுமான கருவிகள் உற்பத்தி நிறுவனங்களை கேட்டர்பில்லர் விரிவாக்கம் செய்யவுள்ளது.
உலகளவில் கட்டுமானம் மற்றும் சுரங்க கருவிகள் உற்பத்தியில் கேட்டர்பில்லர் நிறுவனம் முன்னணி நிறுவனமாக விளங்குகிறது.
இந்த நிலையில், அமெரிக்காவின் சிகாகோ நகருக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் வியாழக்கிழமை பேச்சுவார்த்தைக்கு பிறகு கேட்டர்பில்லர் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த நிகழ்வுகளின்போது, தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா, துறைச் செயலா் வி.அருண் ராய் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
ரூ.4,350 கோடி முதலீடுகள்
தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈா்க்கும் வகையில், அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ மற்றும் சிகாகோ நகரங்களில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொண்டுள்ளாா்.
தமிழக அரசு வெளியிட்ட தகவலின்படி, செவ்வாய்க்கிழமை வரையில் 14 முன்னணி தொழில் நிறுவனங்களுடன் ரூ.4,350 கோடி முதலீட்டுக்கான புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் முதல்வர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும், உலக அளவில் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் உயா் அலுவலா்களைச் சந்தித்து தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.