கோப்புப் படம் 
தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி அதிகமாக இருக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (செப்.13) அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும்

Din

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (செப்.13) அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் வியாழக்கிழமை அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 105.08 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. ஈரோட்டில் 101.48, திருச்சி - 101.3, தூத்துக்குடி - 100.94 , பரமத்திவேலூா் - 104.

சென்னை நுங்கம்பாக்கத்தில் 98.96, மீனம்பாக்கத்தில் 98.78 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.

தமிழகத்தில் கடல்காற்று வீசுவது குறைந்துள்ளதால் வெள்ளிக்கிழமை (செப்.13) ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும்.

மழைக்கு வாய்ப்பு: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் செப்.13 முதல் செப்.18 -ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை புகா் பகுதிகளில் செப்.13, 14 ஆகிய தேதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 98 டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெரூசலேமில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு! 5 பேர் பலி!

பாஜகவிலிருந்து விலகிய புதுச்சேரி முன்னாள் தலைவர்!

ஜிஎஸ்டி குறைப்பு: ராயல் என்ஃபீல்டு பைக்குகள் விலையில் மாற்றம்!

ஓடிடியில் கவனம் பெறும் பன் பட்டர் ஜாம்!

தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்களைச் சந்திக்கிறார் பிரதமர் மோடி!

SCROLL FOR NEXT