ஃபோர்டு மோட்டார்ஸ் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை செய்தபோது எடுக்கப்பட்ட படம். MK Stalin/X
தமிழ்நாடு

தமிழகத்தில் மீண்டும் உற்பத்தியை தொடங்குகிறது ஃபோர்டு!

தமிழகத்தில் உற்பத்தியை தொடங்குவது குறித்து ஃபோர்டு நிறுவனத்தின் அறிவிப்பு பற்றி...

DIN

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்று தமிழகத்தில் மீண்டும் உற்பத்தியை தொடங்குவதாக ஃபோர்டு கார் நிறுவனம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈா்ப்பதற்காக, அமெரிக்காவுக்கு கடந்த 27-ஆம் தேதி பயணம் மேற்கொண்ட முதல்வா் மு.க.ஸ்டாலின் 17 நாள்களாக சான்பிரான்சிஸ்கோ, சிகாகோ ஆகிய நகரங்களில் உள்ள தொழில் முதலீட்டாளா்களைச் சந்தித்து பேச்சுவாா்த்தைகள் மேற்கொண்டார்.

இந்த பேச்சுவார்த்தை மூலம், 18 முன்னணி நிறுவனங்கள் தமிழகத்தில் ரூ. 7,616 கோடி முதலீடுகளை செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன.

ஃபோர்டு நிறுவனத்துடன் பேச்சு

சென்னை அருகே மூடப்பட்ட முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு மோட்டார்ஸ் நிறுவன அதிகாரிகளை சந்தித்து மீண்டும் உற்பத்தியை தொடங்குவது குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார்.

இந்த நிலையில், தமிழகத்தில் மீண்டும் உற்பத்தியை தொடங்குவதாக ஃபோர்டு நிறுவனம் வெள்ளிக்கிழமை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து ஃபோர்டு நிறுவனத்தின் நிர்வாகி கே ஹார்ட் வெளியிட்ட செய்தியில், சென்னையில் மீண்டும் உற்பத்தியை தொடங்குவதற்கு அனுமதி கோரி மாநில அரசுக்கு கடிதம் வழங்கியுள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.

இந்த நிறுவனம் மீண்டும் உற்பத்தியை தொடங்கினால், தமிழகத்தில் 3,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“இதற்கு மேலும் கூட்டணி வேண்டுமா?” செங்கோட்டையன் - அமித்ஷா சந்திப்பு குறித்து திருமா விமர்சனம்

காத்மாண்டு விமான நிலையம் மறுஅறிவிப்பின்றி மூடல்!

“விஜய் சுற்றுப்பயணம்! அனுமதி வழங்கப்பட வேண்டும்!” தொல். திருமாவளவன் பேட்டி

தலைமுடி வளர தேங்காய் எண்ணெய்யை இப்படி பயன்படுத்துங்கள்!

வெள்ளம் பாதித்த பகுதிகளை ஹெலிகாப்டரில் பார்வையிட்ட Modi

SCROLL FOR NEXT