முகப்பு
தமிழ்நாடு

அடுத்த 3 மணி நேரத்துக்கு 5 மாவட்டங்களில் மழை!

தென் மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Updated On : 14 செப்டம்பர், 2024 at 8:22 AM
கோப்புப்படம்
பகிர்:

தென் மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில்,

அடுத்த 3 மணி நேரத்துக்கு இன்று(செப். 14) மாலை 4 மணி வரை கோவை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று முதல் செப். 20 ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்

தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு ஓரிரு இடங்களில் 2- 3 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →