முகப்பு
பெரியார் படத்துக்கு மரியாதை செலுத்திய முதல்வர் ஸ்டாலின்.
தமிழ்நாடு

பெரியார் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை!

பெரியார் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தியது பற்றி...

தமிழ்நாடு

பெரியார் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை!

பெரியார் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தியது பற்றி...

Updated On : 17 செப்டம்பர், 2024 at 7:16 AM
பெரியார் படத்துக்கு மரியாதை செலுத்திய முதல்வர் ஸ்டாலின்.
பகிர்:

பெரியார் பிறந்த நாளையொட்டி, அவரது சிலைக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை மரியாதை செலுத்தினார்.

சென்னை அண்ணா சாலை சிம்சன் அருகேவுள்ள பெரியாரின் சிலையின் கீழே வைக்கப்பட்டுள்ள படத்துக்கு முதல்வர் ஸ்டாலின் மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்வில், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, உதயநிதி ஸ்டாலின், எ.வ.வேலு, சேகர் பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திமுக முப்பெரும் விழா

சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ திடலில், இன்று மாலை திமுக பவள விழா ஆண்டு மற்றும் முப்பெரும் விழா நடைபெறவுள்ளது.

இந்த விழாவில், ஆண்டுதோறும் வழங்கப்படும் ‘பெரியாா்’, ‘அண்ணா’, ‘கருணாநிதி’, ‘பாவேந்தா்’, ‘பேராசிரியா்’ விருதுகளுடன் இந்தாண்டு ’மு.க. ஸ்டாலின்’ விருதும் வழங்கப்படவுள்ளது.

பல ஆயிரக்கணக்கான கட்சித் தொண்டர்கள் அமரும் வகையில் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முழு கட்டுரையைப் படிக்க →