விபத்து நடைபெற்ற இடம். Din
தமிழ்நாடு

புதுக்கோட்டை வருவாய்க் கோட்டாட்சியர் வாகனம் மோதி 2 பேர் பலி!

இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் சம்பவ இடத்தில் பலி.

DIN

புதுக்கோட்டை: புதுக்கோட்டை வருவாய்க் கோட்டாட்சியரின் வாகனம் மோதி, இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

புதுக்கோட்டை வருவாய்க் கோட்டாட்சியர் பா. ஐஸ்வர்யா, தனது அரசு வாகனத்தில் திருமயம் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை முற்பகலில் புறப்பட்டார்.

லெம்பலக்குடி சுங்கச்சாவடி தாண்டி சென்றபோது, நகரத்துப்பட்டி அருகே எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது திடீரென மோதியது.

இந்த விபத்தில், இருசக்கர வாகனத்தில் வந்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த இருவரும் பள்ளத்தில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

வருவாய்க் கோட்டாட்சியரின் வாகன ஓட்டுநர் காமராஜுவுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. வருவாய்க் கோட்டாட்சியர் பா. ஐஸ்வர்யாவுக்கும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

இருவரும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக, நமணசமுத்திரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கவினின் மரணம் கடைசியாக இருக்குமா? அஞ்சலி செலுத்தியபின் Seeman பேட்டி!

ஆகஸ்ட் 11 முதல் இபிஎஸ் 3ம் கட்ட சுற்றுப்பயணம்

திடக்கழிவு மேலாண்மை: முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

கல் எறிந்தவருக்கும் பேறு...

நாயன்மார்கள் குரு பூஜை...

SCROLL FOR NEXT