தமிழ்நாடு

தமிழக கோயில்களுக்கு ஆவின் மூலமே நெய் வாங்கப்படுகிறது: அமைச்சர் சேகர்பாபு

தமிழக கோயில்களுக்கு ஆவின் மூலமே நெய் வாங்கப்பட்டு வருகிறது என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

DIN

சென்னை: தமிழக கோயில்களுக்கு ஆவின் மூலமே நெய் வாங்கப்பட்டு வருகிறது என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

திருப்பதி லட்டு தயாரிக்க விநியோகிக்கப்பட்ட நெய்யில் விலங்கின் கொழுப்பை கலந்ததாக தமிழ்நாட்டைச் சோ்ந்த தனியாா் நிறுவனம் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிறுவனமே பழனி முருகன் கோயிலுக்கும் நெய் விநியோகிப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வைரலானது.

இந்த நிலையில், தமிழக கோயில்களுக்கு ஆவின் மூலமே நெய் வாங்கப்பட்டு வருகிறது என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு விளக்கம் அளித்துள்ளார்.

சென்னையில் சனிக்கிழமை செய்தியாளர்களுடன் பேசிய அமைச்சர் சேகர்பாபு, தமிழக கோயில்களுக்கு ஆவின் மூலம் மட்டுமே நெய் வாங்க வேண்டும் என 2021 இல் உத்தரவு விடப்பட்டுள்ளது.

அதன்படி, தமிழகத்தில் உள்ள கோயில்களுக்கு ஆவின் மூலமே நெய் வாங்கப்பட்டு வருகிறது.

பழனி கோயிலில் பஞ்சாமிா்தம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் நெய், முழுக்க முழுக்க ஆவின் நிறுவனத்திடமிருந்தே பெறப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தகவல் முற்றிலும் பொய்யான செய்தி.

தேவை அதிகமாக இருக்கும் நிலையில், தனியார் நிறுவனத்திடம் இருந்து நெய் வாங்கப்படுகிறது. அந்த தனியார் நிறுவனம் தற்போது திருப்பதி லட்டு விவகாரத்தில் புகாருக்குள்ளாகி இருக்கும் நிறுவனம் அல்ல.

கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தரமான பஞ்சாமிர்தம் வழங்கப்பட்டு வருகிறது. தொடர்ச்சியான பரிசோதனைகளுக்கு பின்னரே பக்தர்களுக்கு பஞ்சாமிர்தம் வினியோகிப்படுகிறது.

இறை அன்பர்களுக்கு எதிரான ஆட்சியாக திசை திருப்புவதற்கு தொடர்ந்து சிலர் முயற்சித்து வருகின்றனர். அவர்களின் கனவுகளை தகர்த்தெறிவதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

மேலும் கோயில் நெய் தொடர்பாக விஷம தகவல் பரப்பிய பாஜகவை சேர்ந்த செல்வக்குமார் மற்றும் வினோஜ் பி.செல்வம் ஆகிய இருவர் மீதும் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தவறான தகவல்களை பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

9 மாவட்டங்களில் இன்று கனமழை!

கூகுள் மேப் பயன்படுத்துபவரா... மெட்ரோ டிக்கெட் முதல் ஜெமினி ஏஐ வரை.. 10 புதிய அம்சங்கள்..!

'பெண்களுக்கான அரசு' என்று கூற முதல்வர் கூச்சப்பட வேண்டும்: இபிஎஸ் கண்டனம்!

சாயப்பட்டறையில் பயங்கர தீவிபத்து! அணைக்கப் போராடும் தீயணைப்பு வீரர்கள்! | Maharashtra

ரஷியாவில் காணாமல் போன இந்திய மாணவர்: 19 நாள்களுக்குப் பிறகு அணையில் உடல் கண்டெடுப்பு!

SCROLL FOR NEXT