கோப்புப் படம் 
தமிழ்நாடு

நீலகிரி: யானை தாக்கியதில் ஒருவர் பலி! சிறுத்தை தாக்கியதில் ஒருவர் காயம்!

வெவ்வேறு பகுதிகளில் நடந்த விலங்குகளின் தாக்குதல்; மக்கள் போராட்டம்

DIN

நீலகிரியில் வெவ்வேறு பகுதிகளில் யானை, சிறுத்தை தாக்கியதில் ஒருவர் பலியானதுடன், ஒருவர் காயமடைந்தார்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் சேப்பந்தோட்டில், வியாழக்கிழமை அதிகாலையில் 60 வயது முதியவர் ஒருவர், வீட்டிலிருந்து வெளியே வந்தபோது, ஒற்றை காட்டுயானை தாக்கியுள்ளது. புதருக்கு பின்னால் இருந்த யானையை கவனிக்காமல், முதியவர் வெளியில் வந்துள்ளார்.

யானையின் தாக்குதலால் முதியவர் உயிரிழந்த நிலையில், அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காட்டு விலங்குகளால் அடிக்கடி இதுபோன்ற உயிரிழப்புகள் ஏற்படுவதாகக் கூறி, சுமார் 5 மணிநேரமாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், மற்றொரு சம்பவமாக, நீலகிரியில் உள்ள கோத்தகிரி பகுதியில் மணி என்பவர் வீட்டினுள் நுழைந்த சிறுத்தை, மணியை தாக்கியுள்ளது. இருப்பினும், மணியின் அலறல் சத்தத்தைக் கேட்ட அக்கம்பக்கத்தினர், சிறுத்தையை விரட்டியுள்ளனர்.

சிறுத்தை தாக்கியதில், மணியின் முகம் மற்றும் கால்களில் காயங்கள் ஏற்பட்டதையடுத்து, அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் உலகளவில் 3ஆம் இடத்தில் இந்தியா: ஜெ.பி.நட்டா

மெல்ல விடைகொடு மனமே.. அரசு இல்லத்தை 8 மாதங்களுக்கு பிறகு காலி செய்தாா் டி.ஒய்.சந்திரசூட்!

போக்ஸோவில் ஆசிரியா் கைது

வழிப்பறி: 3 போ் கைது

நாய்க்குட்டிகளோடு பயணிகள் விளையாடும் புதிய முன்னெடுப்பு: ஹைதரபாத் விமான நிலையத்தில் அறிமுகம்

SCROLL FOR NEXT