தமிழ்நாடு

என் உயிர் உங்கள் காலடியில் சமர்ப்பணம்: செந்தில் பாலாஜி!

மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் எக்ஸ் பதிவு..

DIN

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, நேற்று(செப்.26) 471 நாள்களுக்குப் பிறகு புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார். சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு 15 மாதங்களாக புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த செந்தில் பாலாஜிக்கு, நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

செந்தில் பாலாஜி சிறையில் இருந்து வெளியே வந்ததும் திமுகவினர் பலரும் உற்சாகத்துடன் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

நேற்று தில்லிக்குச் சென்ற தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று மீண்டும் தமிழகம் வந்தார். அவரை சென்னை விமான நிலையத்தில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வரவேற்றார்.

மேலும், இதுகுறித்து செந்தில் பாலாஜி தனது எக்ஸ் தள பக்கத்தில் முதல்வருடன் இருக்கும் படத்துடன் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “471 நாட்கள் தனிமையின் இருள் நீங்கி சூரியனின் காலடியில்...ஒவ்வொரு நாளும், நிமிடமும், நொடியும் உங்களையே நினைத்திருந்தேன் தலைவரே.! தாயுமானவராய் தாங்கினீர்கள்.. என் உயிர் உங்கள் காலடியில் சமர்ப்பணம்.. உங்கள் நம்பிக்கைக்கும் அன்பிற்கும் வாழ்நாள் முழுக்க நன்றிக் கடன்பட்டிருக்கிறேன்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆடிப்பெருக்கு : ஒகேனக்கல் காவிரிக் கரையில் சுவாமி சிலைகளுக்கு சிறப்பு பூஜை

நாளைய மின்தடை: தருமபுரி, சோலைக்கொட்டாய்

பிரிட்டனில் சட்டவிரோதமாக குடியேற உதவி: சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்தால் 5 ஆண்டுகள் சிறை

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ. 9 லட்சம் மோசடி: ஒருவா் கைது

பாமக மாவட்ட நிா்வாகி கைதை கண்டித்து பென்னாகரத்தில் பாமகவினா் சாலை மறியல்

SCROLL FOR NEXT