புதிய அமைச்சர்கள் ஆர். ராஜேந்திரன், கோவி. செழியன் X
தமிழ்நாடு

தமிழக அமைச்சரவையில் 3 பேர் நீக்கம்! புதிதாக இருவருக்கு வாய்ப்பு!

தமிழக அமைச்சரவை மாற்றம் பற்றி...

DIN

தமிழக அமைச்சரவையில் இருந்து மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான் மற்றும் கே. ராமசந்திரன் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

மேலும், புதிதாக கோவி. செழியன் மற்றும் ஆர். ராஜேந்திரன் ஆகியோர் அமைச்சர்களாக பொறுப்பேற்கவுள்ளனர்.

தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யக் கோரிய முதல்வர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையை ஏற்றதாக ஆளுநர் மாளிகை சனிக்கிழமை இரவு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் அமைச்சராகும் செந்தில் பாலாஜி

அமலாக்கத் துறை கைது செய்ததைத் தொடர்ந்து அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி ராஜிநாமா செய்தார்.

தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ள செந்தில் பாலாஜி மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.எம். நாசர் ஆகியோர் மீண்டும் அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளனர்.

அவர்களுடன், திருவிடைமருதூர் சட்டப்பேரவை உறுப்பினர் கோவி. செழியன் மற்றும் குறிஞ்சிப்பாடி சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.ராஜேந்திரன் ஆகியோரும் புதிதாக அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மூன்று அமைச்சர்கள் நீக்கம்

பால்வளத் துறை அமைச்சர் டி. மனோ தங்கராஜ், சிறுபான்மைத் துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் கே.ராமசந்திரன் ஆகியோர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

அரசு கொறடா

சுற்றுலாத் துறை அமைச்சர் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்ட ராமச்சந்திரன், அரசுக் கொறடாவாக நியமிக்கப்பட்டுள்ளார். அரசுக் கொறடாவாக இருந்த கோவி. செழியன் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்த 24 மணி நேரத்தில் வடகிழக்குப் பருவமழை!

சக்தித் திருமகன் ஓடிடி தேதி!

மகாபாரதத்தில் கர்ணனாக நடித்த பங்கஜ் தீர் காலமானார்!

வியாபார வெற்றிக்கு 1000 வழிகள்

வெற்றியின் வரைபடம்

SCROLL FOR NEXT