தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை இயல்பைவிட 18% கூடுதல்!
தென்மேற்கு பருவமழை இயல்பைவிட இந்தாண்டு கூடுதல..
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை இயல்பைவிட இந்தாண்டு 18 சதவீதம் கூடுதலாகப் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் வரை 4 மாதங்கள் வரை பெய்யும். தென்மேற்கு பருவ மழையின் மூலம் தமிழகத்தின் கன்னியாகுமரி, தேனி, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்கள் மழை பொழிவை பெறுகின்றன.
இந்த நிலையில் நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை பெய்துவருகின்றன. கேரளத்தில் மட்டுமின்றி தமிழகத்திலும் தென்மேற்கு பருவமழை பரவலாகப் பெய்து வருகின்றது.
Advertisement
Advertisement
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் கூறுவது..
தமிழகத்தில் ஜூன் 1 முதல் செப்.30 வரை தமிழகத்தில் பெய்ய வேண்டிய மழையின் அளவு 389.3 மி.மீ ஆகும். இயல்பாக 328.5 மி.மீ வரை மழைப் பதிவாகும். இந்தாண்டு பெய்த மழையின் அளவு 39 செ.மீ அதாவது இயல்பை விட 18 சதவீதம் அதிகரித்துள்ளது.
அந்தவகையில் நெல்லையில் 92.5 இயல்பு மழையை விட அதிகபட்சமாக 265 சதவீதம் பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக நாகையில் இயல்பு மழை 246.6 மி.மீட்டரிலிருந்து 50 சதவீதம் குறைவாகப் பதிவாகியுள்ளது.
தமிழகத்தைப் பொருத்தவரை இன்று 12 மாவட்டங்களிலும், நாளை 7 மாவட்டங்களிலும், நாளை மறுநாள் 9 மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.