நடிகர் விஜய் ’தமிழக வெற்றிக் கழகம்(தவெக)’ என்ற பெயரில் அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளார். இந்நிலையில், அவரது கட்சியின் மாநில அளவிலான முதல் மாநாடு விவகாரமே தற்போது தமிழக அரசியலில் மையப் புள்ளியாக உள்ளது.
இந்நிலையில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தவெக மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான அனுமதியும் காவல்துறையால் வழங்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தவெக மாநாட்டுக்கான பூமி பூஜை குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அக்டோபர் 2-ஆம் தேதி தமிழக வெற்றிக் கழக மாநாட்டு பந்தலுக்கான பூமி பூஜை நடைபெறும் என்று தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.